நயன் மற்றும் விக்கிக்கு வெளிநாட்டில் பார்ட்டி கொடுத்த ஸ்ரீதேவி மகள். வைரலாகும் புகைப்படம்.

0
51422
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. மேலும்,நடிகை நயன்தாரா அவர்கள் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு தயாரிப்பாளர் போனி கபூரை சந்தித்து உள்ளார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. நடிகை நயன்தாரா அவர்களுக்கு வருகிற நவம்பர் 18ஆம் தேதி அன்று பிறந்த நாள். இந்த பிறந்த நாளின் மூலம் நயன் 35 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்க உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. மேலும், இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

-விளம்பரம்-
Vignesh Shivan, Nayanthara, Boney Kapoor and Khushi Kapoor

நடிகை நயன்தாரா அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வரவிருக்கும் ‘தர்பார்’ படத்தை முடித்துவிட்டார். பின் தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனின் தயாரிப்பில் வரவிருக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா அவர்கள் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அஜித் நடிப்பில் வரவிருக்கும் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நியூயார்க்கில் சந்தித்துள்ளார். மேலும், நியூயார்க்கில் அவரை சந்திக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் பாருங்க : திருமணத்திற்கு பின்னரும் இப்படி ஒரு ஆடை தேவையா. சாந்தினியின் புகைப்படத்திற்கு குவியும் கமன்ட்.

- Advertisement -

மேலும், நடிகை நயன்தாரா அதில் ‘வெறுமனே நியூயார்க்’ என்று மட்டும் கமெண்ட் போட்டுள்ளார். இது குறித்து பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. தல அஜித் அவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வலிமை. மேலும்,நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனி கபூரும்சேர்ந்து தான் வலிமை படத்தை உருவாக்கி வருகிறார்கள். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கியது என்ற தகவலும் சமூக வலைத்தளங்களில் வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார்? என்று பல கேள்விகளும் வந்து கொண்டிருந்த நிலையில் நயன்தாரா, திரிஷா ,தமன்னா என்ற சிபாரிசுகள் வந்திருக்கின்றன. இதனைத்தொடர்ந்து நயன்தாராவை நியூயார்க்கில் பார்த்து சந்தித்துள்ளார் போனி கபூர்.

அப்போது வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்டு உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது. மேலும், நயன்தாரா ட்விட்டரில் போட்ட கமெண்ட் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லை என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும், இவர்களுடைய சந்திப்பு சும்மா நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் வலிமை படத்தின் ஹீரோயின் இன்னும் முடிவாகாத நிலையில் அந்த படம் தொடர்பான சந்திப்பில் போனிகபூர் இருக்கிறார். வழக்கத்தை விட நயன்தாரா அவர்கள் அதிக சம்பளம் கேட்கிறார் என்று அவருடைய மேனேஜர் பேசுவதை கேட்டு போனிகபூர் தானே நயன்தாராவிடம் பேச உள்ளார் என்றும் கூறியிருந்தார்.

-விளம்பரம்-

அதையொட்டி நடந்த சந்திப்பாக தான் இந்த சந்திப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அஜித்தின் விசுவாசம் படத்துக்காக 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளார் நயன்தாரா. பின் ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் படத்துக்கு 8 கோடி ரூபாய் வாங்கி உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்துக்கு 6 கோடி கேட்டு உள்ளார் என்ற தகவல் உள்ளது. மேலும்,நயன்தாரா கேட்கும் சம்பளத்தை ஏற்றுக்கொண்டு அவரை வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்படுவாரா? என்பது பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

Advertisement