மேக்கப்பிற்கு முன், மேக்கப்பிற்கு பின் – நயன்தாரா வெளியிட்ட வீடியோ. அவரின் அழகிற்கு காரணம் இது தானா?

0
824
- Advertisement -

மேக்கப் இல்லாமல் நடிகை நயன்தாரா வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று சினிமாவில் ஒரு டாப் நடிகையாகவும், தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும், பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராகவும் நயன்தாரா கலக்கி கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் கடந்த ஆண்டு நயன் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த படம் ஜவான். இந்த படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து இருந்தது. மேலும், இந்த படத்திற்காக தாதாசாகெப் பால்கே இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

- Advertisement -

நயன்தாரா திரைப்பயணம்:

அதன் பின் கடைசியாக நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன் நடித்த படம் அன்னபூரணி. இது நயன்தாராவின் 75வது படமாகும். இந்த படத்தில் நயன்தாராவுடன் ஜெய், சத்யராஜ், கே எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி உட்பட பலர் முக்கிய சுரேஷ் நடித்திருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க சமையலை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்து இருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது.

தொழிலதிபர் நயன்தாரா:

தற்போது நயன்தாரா அவர்கள் டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி போன்ற படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் சில ஹிந்தி திரைப்படங்களிலும் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இப்படி நயன் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தொழிலதிபராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக நயன்தாரா பிசினஸ் வுமனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் முதலில் தீ லிப் பாம் கம்பெனி என்று நிறுவனத்தை தொடங்கினார்.

-விளம்பரம்-

நயன்தாரா கம்பெனி நிறுவனம்:

இதை அடுத்து கடந்த ஆண்டு 9ஸ்கின் என்ற சரும பராமரிப்பு தயாரிப்புகளை நயன் அறிமுகப்படுத்திருந்தார்.
இது சருமத்திற்கான கிரீம், சீரம், ஆயில் போன்ற பொருட்களை வழங்குகிறது. இந்த நிறுவனம் வெளியான சில மாதங்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை அடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் ‘Femi 9’ என்ற நாப்கின் தயாரிப்பை நயன் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த தயாரிப்பும் மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ :

இந்த நிலையில் நயன்தாராவின் லேட்டஸ்ட் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நயன் கொஞ்சம் கூட மேக்கப் போடாமல் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய 9 ஸ்கின் அழகு சாதன பொருட்களை வைத்து எப்படி மேக்கப் போடுவது என்பதையும் அந்த வீடியோவில் காண்பித்து இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலருமே, லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா என்றெல்லாம் புகழ்ந்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement