மருத்துவனை தீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்ட நயன்தாராவின் தந்தை – கொச்சின் விரைந்த நயந்தாரா.

0
1156
nayan
- Advertisement -

நடிகை நயன்தாராவின் தந்தை உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். இந்நிலையில் அவரின் அப்பா குரியன் கொடியட்டு கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா மருத்துவமனைக்கு விரைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : தல அஜித் மகளை அள்ளிக்கொஞ்சும் தளபதி விஜய் – இந்த வீடியோவ பாத்திருக்கீங்களா. செம குயூட்டா இருக்கு பாருங்க.

- Advertisement -

சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தனி விமானத்தில் சென்றிருந்தார்.மேலும், நயன்தாரா தனது தந்தையை சந்திக்க தான் விக்னேஷ் சிவனுடன் சென்று இருந்தாராம். நயன்தாராவின் தந்தையின் உடல்நிலை குன்றியதால் தான் அவரை சந்திக்க நயன்தாரா சென்றதாக கூறப்படுகிறது. மேலும், தனது மகளை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்று அவரது தந்தை ஆசைப்படுகிறாராம்.

இப்படி ஒரு நிலையில் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நடிகை நயன்தாரா விரைவில் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகிஇருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். அது போல நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement