தல அஜித் மகளை அள்ளிக்கொஞ்சும் தளபதி விஜய் – இந்த வீடியோவ பாத்திருக்கீங்களா. செம குயூட்டா இருக்கு பாருங்க.

0
696
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினி – கமலுக்கு பின் விஜய் அஜித் இணை தான் தற்போதைய தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் தல தளபதியான விஜய் மற்றும் அஜித் எப்போதுமே சிறந்த நண்பர்களாக விளங்கி வருகின்றனர். ஆரம்ப காலத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக படத்தில் கூட நடித்தனர். அவ்வளவு ஏன் நேருக்கு நேர் படத்தில் கூட சூர்யாவிற்கு முன் அஜித் தான் நடித்தார். ஆனால், சில காரணத்தால் அந்த படத்தில் இருந்து வெளியேறினார் அஜித். இவர்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் ஒரு சில பாடங்களில் மறைமுகமாக விமர்சித்தாலும் நிஜ வாழக்கையில் நல்ல நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

விஜய்க்கு திவ்யா ஷாஷா என்ற மகளும் சஞ்சீவ் என்ற மகனும் இருக்கின்றனர். அதே போல அஜித்திற்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார். இதில் விஜயின் மகள் ஷாஷாவும் அஜித் மகள் அனுஷாவும் ஒன்றாக பேட்மிண்டன் பயற்சி எடுத்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு ஏன் விஜய் மகளுக்கு அஜித் அறிவுரை கூட வழங்கி இருக்கிறார்.

இதையும் பாருங்க : தமிழகத்தில் அன்றைய முதல்வர் தகுதி வாய்ந்தவர்களாக இல்லை – கேரள பெண் மரணத்தோடு சித்ரா மரணத்தை ஒப்பிட்ட நடிகை.

- Advertisement -

தனது மகளை அழைத்து வருவதற்காக சென்ற போது விஜய் மகளிடம் எப்போதும் பேட்மிண்டன் விளையாடுவதை நிறுத்திவிடாதே ,அது உனது உடல் ஆரோக்கியத்திற்கும், மனதிற்கும் மிகவும் நல்லது என்று அன்பான அறிவுரைகளை கூட கூறி இருந்தார் என்ற செய்திகள் கூட இருக்கிறது. இந்நிலையில் அஜித் மகள் அனோஷ்கா சிறு வயதில் இருந்த போது அவரை விஜய் தூக்கி கொஞ்சிய வீடியோ ஒன்று தற்போது சமூக வளைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவருமே அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதே போல அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement