தொடர்ந்து காபி கதைகளில் நடித்து வரும் நயன் – நெற்றிக்கண் படமும் இந்த படத்தின் காபி தானா ?

0
2835
- Advertisement -

திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இன்றைய நடிகைகளில் கனவுக்கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். மேலும் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைப்பார்கள். நயன்தாரா, இளையதளபதி விஜயின் “பிகில்” படத்தில் நடித்தும் , அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் OTT தளத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

-விளம்பரம்-

ஹீரோக்களளுடன் நடித்து ஒரு புறம் ஹிட் கொடுத்தாலும் நடிகை நயன்தாரா வருடத்திற்கு ஒரு முறை லீடு ரோலில் நடித்து ஹிட் கொடுத்து விடுகிறார். இவர் லீட் ரோலில் நடித்த அறம், கோலமாவு கோகிலா , மாயா போன்ற பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படி ஒரு நிலையில் நடிகை நயன்தாரா மீண்டும் லீட் ரோலில் நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படத்தின் டீஸர் இன்று (நவம்பர் 18) வெளியாகியுள்ளது.

- Advertisement -

மூக்குத்தி அம்மன் படத்திற்கு பின்னர் நடிகை நயன்தாரா ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஏற்கனவே சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அசுத்த பேய் படமான அவள் படத்தை இயக்கிய மிலந்த் ராவ் இயக்கியிருக்கிறார். இந்த படத்தை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒரு கண் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் இந்த படம் 2011 ஆம் ஆண்டு கொரியன் மொழியில் வெளியான ‘Blind’ என்ற படத்தின் ரீ- மேக் என்றும் கூறப்படுகிறது. நயன்தாராவின் கடைசி படமான கொலையுதிர் காலம் திரைப்படமும் ஹாலிவுட்டில் வெளியான ‘hush’ என்ற படத்தின் ரீ-மேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல கோலமாவு கோகிலா படமும் ஒரு ஹாலிவுட் படத்தின் ரீ-மேக் தான்.

-விளம்பரம்-
Advertisement