நயன்தாராவின் உதவியாளர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 80 ஆயிரமா ?

0
58902
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகைகள் நீண்ட காலம் நிலைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால், சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. நயன்தாராவின் இயற்பெயர் ‘டயானா மரியா குரியன்’. சொல்லப்போனால் நயன்தாரா அவர்கள் டயானா போல தான் அழகான தோற்றமும்,திறமையும் உடையவர். அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். ரசிகர்கள் நயன்தாராவை எவர்கிரீன் நடிகை என்று கூட அழைப்பார்கள்.

-விளம்பரம்-
nayanthara

இவர் சினிமாத்துறைக்கு முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் அறிமுகமானர். பின்னர் தமிழில் 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். தற்போது நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நயன் சமீப காலமாகவே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். நல்ல கதை என்றால் காமெடி நடிகர்களின் படத்தில் கூட நடிக்க நடிகை நயன்தாரா அவர்கள் தயங்குவது கிடையாது.

- Advertisement -

இந்த ஆண்டு இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். தர்பார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வந்த பிகில், விசுவாசம் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட். இதனால் அம்மணியின் மார்க்கெட் எங்கோ சென்று விட்டது. இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் நயன்தாராவின் உதவியாளர்களின் சம்பளம் குறித்து பேசி இருந்தார்.

அதில், நயன்தாராவுடன் 6-7 உதவியாளர்கள் வருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளைக்கு 7-12 ஆயிரம் சம்பளம் தேவைப்படுகிறது. அவரது உதவியாளர்களுக்கான மொத்த செலவு ஒரு நாளைக்கு 70,000-80,000 வரை வருகிறது. ஒரு படத்தில் 50 நாட்கள் பணிபுரிந்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு செலவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று கூறியதாக பல்வேறு வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது சமீபத்தில் இயக்குனர் சித்ராலட்சுமணன் இயக்கிவரும் யூடியூப் சேனலில் நடிகர் வெங்கட் சுபா கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அப்போது இருவரும் உரையாடுகையில் நயன்தாரா கமலஹாசன் இடமிருந்து சொந்தப் பணத்தில் எப்படி தனது உதவியாளர்களுக்கு செலவு செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசியுள்ளார்கள். அதில் பேசிய சித்ரா லட்சுமணன் என்னுடைய சூரசம்ஹாரம் படத்தில் நடிகர் கமலஹாசன் ஒரு ரூபாய் கூட கருப்பு பணமாக பெற்றுக்கொண்டார். சமீபத்தில் பல நடிகர்கள் கமல்ஹாசனிடமிருந்து நடிப்பில் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அவரிடமிருந்து இந்த ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். பெரிய ஹீரோ மற்றும் ஹீரோயின்கள், குறிப்பாக நயன்தாரா தயாரிப்பாளருக்கு உதவ இதைப் பின்பற்ற வேண்டும்.

Advertisement