தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை நஸ்ரியா. தமிழில் நேரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. பிறகு ராஜா ராணி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்தவர். அதற்கு பிறகு நையாண்டி, திருமணம் எனும் நிக்கா உள்ளிட்ட சில படங்களில் மட்டும் நடித்து இருந்தார். பின் நஸ்ரியா நடிப்பில் மிகப்பெரிய வெற்றி அடைந்த படம் பெங்களூர் டேஸ். இந்த படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ரீமேக்காகி அந்த மொழிகளிலும் பாராட்டப்பட்டது. இது நடிகை நஸ்ரியா மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்த படம். ‘பெங்களூர் டேஸ்’ வெளியான ஆண்டிலேயே அதாவது 2014 ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியா, நடிகர் பகாத் பாஸிலை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிகை நஸ்ரியா அவர்கள் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. நடிகை நஸ்ரியா திருமணம் ஆனாலும் ரசிகர்களின் கனவுக் கன்னியாகவே இன்று வரை திகழ்ந்து வருகிறார். மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் மற்றும் ஓம் சாந்தி ஓசானா ஆகிய படங்களில் நஸ்ரியா குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு நஸ்ரியா நடித்த படங்களில் எல்லாம் அவர் குழந்தைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். கிட்டத்தட்ட அவர் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்ட காலத்திற்கு முன் நஸ்ரியா நடித்த எல்லா படங்களிலும் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடித்திருந்தார்.
இதையும் பாருங்க : இரண்டாம் திருமணம், மூன்றாம் முறையாக கர்ப்பமாக இருந்த சபாஷ் பட நடிகைக்கு குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகை நஸ்ரியா அவர்கள் ஆறு வருடங்களுக்குப் பின் தன் கணவர் பகத் பாசில் உடன் இணைந்து திரைப்படத்தில் நடித்து உள்ளார். நடிகை நஸ்ரியா அவர்கள் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தனது கணவர் பகத் பாசிலுக்கு ஜோடியாக மலையாளத்தில் உருவாகி வரும் “ட்ரான்ஸ்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கி உள்ளார். இதற்கு முன்பு நஸ்ரியா படங்களில் நடித்த கதாபாத்திரங்கள் போல் இல்லாமல் இந்த படத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து உள்ளாராம். மேலும், இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனனும் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.
இயக்குனராக பட்டையை கிளப்பிய வாசுதேவ் மேனன் அவர்கள் தற்போது நடிகராக களம் இறங்கியிருக்கிறார். இந்த படம் வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று திரையரங்களில் வெளியிடப்படும் என்றும் அறிவித்து உள்ளார்கள். மேலும், நடிகை நஸ்ரியா அவர்கள் மீண்டும் சினிமாவில் களம் இறங்கி இருப்பதால் தமிழிலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல அஜித்தின் வலிமை படத்திலும் நஸ்ரியா நடிக்க இருப்பதாகவும் சில தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், இன்னும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.