இந்தியன் 2′ படத்தில் இணைந்த இந்தியன் 1 முக்கிய நடிகர்.! யார் தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
471
indian-2

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் ” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டவது பாகம் தற்போது உருவாக உள்ளது. தற்போது இந்த படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Nedumudi

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவிருக்கிறார். மற்ற நடிகர்கள் யார் என்பது இன்னும் தகவலைகள் வெளிவராத நிலையில், தற்போது இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் நெடுமுனி வேணு இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் ஏற்கனவே இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் கமலை பிடிக்கும் ஒரு சி பி ஐ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 22 ஆண்டுகள் கழித்து கமலுடன் “இந்தியன் 2” படத்தில் மீண்டும் நடிக்கிறார் நடிகர் நெடுமுனி வேணு.

indian

லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வரும்  “இந்தியன் 2”  படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. நடிகர் கமல் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்து வருவதால், அந்த நிகழ்ச்சி முடிந்ததும்  “இந்தியன் 2” படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.