விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ‘நீயா நானா’ ஒன்று. 2006 ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி. சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் ஹரிணி என்ற பெண்மணி பேசியிருக்கும் கருத்துதான் இணையத்தில் வைரலாக்கபட்டு வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியில் ஹரிணி, என்னை,அம்மா, தங்கை மூவரையும் அப்பா விட்டுட்டு வேறு ஒரு கல்யாணம் பண்ணிட்டார். இதனால் எங்க அம்மா வாழ்க்கையில் ரொம்ப கஷ்டத்தை பார்த்திருக்காங்க. எங்களுக்கு கஷ்டம் தீர்வதற்காக அம்மா சாமியிடம் பாப்பாவை தூக்கிக்கொண்டு தீ மிதித்தார். அப்போது தீயில் தவறி பாப்பா விழுந்துவிட்டார். இதனால் அம்மா, பாப்பா உடம்பில் எல்லாம் தீ காயம்பட்டிருந்தது. அம்மாவோட ஒரு கை சரியாக வேலை செய்யவில்லை. இருந்தும் எங்களுடைய அம்மா எங்களை காப்பாற்ற கோயிலில் பிச்சை எல்லாம் எடுத்து இருந்தாங்க.
ஹரிணி பேட்டி:
அதன்பின் கொஞ்சம் கை சரியான பிறகு டைலரிங் கற்றுக்கொண்டு கார்மெண்ட்ஸ்ஸில் கொடுக்கிற பீஸ் எல்லாம் தைத்து கொடுக்க ஆரம்பித்தார். அம்மா படுற கஷ்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை. இதனாலே நான் ஏழாவது படிக்கும்போது துணி தைக்க கற்றுக் கொண்டேன். பள்ளிக்கூடம் முடிந்ததும் கார்மெண்ட்ஸ்ஸில் கொடுக்கிற பீசை தைப்பது என்று என்னுடைய வாழ்க்கையை போய்விட்டது. அதனால் பத்தாம் வகுப்பில் 295 மார்க், 12-ஆம் வகுப்பில் 350 மார்க் தான் எடுக்க முடிந்தது. என்னுடைய குடும்ப சூழலால் தான் என்னால் நன்றாக படிக்க முடியாமல் போனது. அதோடு நான் வேலைக்கு போக காரணம் என்னுடைய தங்கை வைசாலி தான்.
குடும்ப சூழ்நிலை:
அவளுக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு சின்ன வயதிலேயே ஆபரேஷன் பண்ணி இருக்கோம். அவளால் எந்த வெயிட் தூக்க முடியாது, முதுகில் கூட அடிக்க கூடாது. அந்த அளவுக்கு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். அவளுக்கும் உடம்புக்குள் தீக்காயம் ஏற்பட்டு இருக்கு. அதனால் எந்த வேலைக்கும் போக முடியாது. நான் மட்டுமே உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அதனால் தான் வேலைக்கு போக ஆரம்பித்தேன். அரசு கல்லூரியில் பிஎஸ்சி காஸ்ட்யூம் டிசைனிங் படித்தேன். பாதி நாட்கள் தான் கல்லூரி இருக்கும். பார்ட் டைமாக கார்மென்சில் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டேன். கொஞ்சம் கூட ஓய்வு இருக்காது.
தங்கையின் கனவு:
அந்த சூழலிலும் 88 சதவீதம் மார்க் எடுத்தேன். இப்போ வேலை பார்த்தே கார்மெண்ட்ஸ் கம்பெனியிலேயே சூப்பர்வைசராக இருக்கிறேன். எம்எஸ்சி காஸ்ட்யூம் டிசைனிங் படிப்பை கரசில் போட்டிருக்கிறேன். காலையில் 9 மணிக்கு போயிட்டு நைட் 9 மணிக்கு தான் வருவேன். மாசம் 12,000 சம்பளம். அதில் 6000 வீட்டு வாடைக்கு போய்விடும். மீதி சாப்பாடு செலவு, தங்கச்சியோட காலேஜ் பீஸ் எல்லாம் பார்க்க வேண்டும். தங்கச்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கணும் என்று ஆசைப்பட்டார். அவளுடைய கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக வருஷத்துக்கு 30,000 பீஸ் கட்டி படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்.
திருமணம் குறித்து சொன்னது:
அவளுக்கு ஆபரேஷன் பண்றதுக்காக வாங்குன கடன் எல்லாம் இருக்கு. இப்படி பல கஷ்டத்துக்கு நடுவில் தான் இருக்கிறோம். எங்க அப்பாவுக்கு சமீபத்தில் தான் ஆக்சிடெண்ட் ஆனது. இத்தனை நாட்கள் பேசாமல் இருந்த எங்க அப்பாவோட சொந்தக்காரங்க இப்போ வந்து அவரை பார்த்துக்க சொல்லி பேசுறாங்க. எங்க அப்பாவும் பேசினார். எங்களால் முடியாதுன்னு சொல்லி விட்டோம். எங்க அம்மா சில நேரத்தில் என்னை கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்கிறார். இப்போதைக்கு வேண்டாம் பிறகு யோசிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். காரணம், ஒரு ரூபாய் கூட சேர்த்து வைக்கவில்லை. வரதட்சணை இல்லாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டா நிச்சயமாக கல்யாணம் பண்ணிப்பேன். அப்படிப்பட்ட ஒருத்தரை நான் உழைப்பாலும் அன்பாலும் நன்றாக பார்த்து கொள்வேன். அரசாங்கமோ, தொண்டு நிறுவனமோ எங்களுக்கு உதவி செய்தால் நாங்கள் வாழ்நாள் முழுக்க நன்றியுடன் இருப்போம். ஓய்வில்லாத உழைப்பில் இருந்து கொஞ்சம் பெருமூச்சு விடுவேன் என்று கண் கலங்கியபடி கூறியிருந்தார்.