அட, நீயா நானா கோபி அண்ணனும் விஜய் டிவியின் இந்த சூப்பர் ஹிட் சீரியலில் நடித்து வருகிறாரா.

0
1956
gopi
- Advertisement -

“நீயா நானா” நிகழ்ச்சி மூலம் பெரும் அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் கோபிநாத். தொகுப்பாளர்கள் என்றாலே பிறரை கலாய்த்துக்கொண்டு ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-155-826x1024.jpg

இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட். கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.மேலும், விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா நானா” என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.

- Advertisement -

“நீயா நானா” நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் கோபிநாத் அவர்கள் சினிமாவில் காலடி வைத்தார். இவர் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற படத்தில் நடிகர் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தோனி, நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோபிநாத்தை பற்றி இத்தனை விஷயங்கள் தெரிந்தாலும் அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

This image has an empty alt attribute; its file name is 2-33.jpg

அவர் பெயர் பிரபாகரன் சந்திரன். இவரும் ஒரு நடிகர் தான். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே போல இவர் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் பாகம் இரண்டு உள்பட சில சீரியல்களிலும் நடித்து வருகிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே நடிகர் கோபிநாத்தின் அண்ணனும் நடிகரா இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே என வியந்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement