விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் “நீயா நானா” விவாத நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கோபிநாத். விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்துள்ளனர் உதாரணமாக சிவா கார்த்திகேயன் தொடங்கி தற்போது உள்ள பப்பு வரை அனைவருமே பிறரை கலாய்த்துக்கொண்டு, ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால் நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக தனது தூய தமிழில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

Advertisement

இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவது தான் இவரது ப்ளஸ் பாயிண்ட். கோபிநாத் அவர்கள் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் தான் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியில் விவாத நடுவராக பணியாற்றினார். பின்னர் 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.

இதையும் பாருங்க : முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்க போகும் சிம்பு. இந்த பெயரை வையுங்கள் என்று சிபாரிசு செய்யும் ரசிகர்கள்.

தொலைக்காட்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நடிகர் கோபிநாத் சினிமாவில் காலடி வைத்தார். இவர் முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தோனி நிமிர்ந்து நில் திருநாள் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கோபிநாத் ஹீரோவாக படத்தில் நடிக்க உள்ளார். இது எல்லாத்துக்கும் மேல என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பாரதி கணேஷ் என்பவர் இயக்கிவுளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் கோபிநாத்தின் தந்தை சந்திரன் நேற்று உடல்நிலை சரியில்லாமல் காலமாகியுள்ளது கோபிநாத் குடும்பத்தார் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோபிநாத்தின் தந்தை சந்திரனின் உடல் அவரது சொந்த ஊரான அறந்தாங்கி அருகே உள்ள குளக்கரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கோபிநாத்தின் தந்தை இறந்துள்ள செய்தியை கேட்டு பலரும் நேரில் சென்று கோபிநாத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்

Advertisement