துப்புரவு தொழிலாளியாக மாறிய விஜய் டிவி பிரபலம்- குவியும் பாராட்டுக்கள்

0
380
- Advertisement -

துப்புரவு தொழிலாளியாக நீயா நானா கோபிநாத் எடுத்த முயற்சி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. “நீயா நானா” கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர். கோபிநாத் அவர்கள் முதன் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தான் அறிமுகமானார். அதன் பின்னர் ஜெயா டிவி, என்டிடிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும், 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா ஆண்டு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.

-விளம்பரம்-
Vijay Tv Neeya Naana Fame Gopinath Fame Prabakaran Chandiran

ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி. “நீயா நானா” நிகழ்ச்சி மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் கோபிநாத். தொகுப்பாளர்கள் என்றாலே பிறரை கலாய்த்துக்கொண்டு ஜாலியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழுங்குவார்கள். ஆனால், நீயா நானா கோபி மட்டும் இவர்களின் பாதையில் இருந்து சற்று வித்யாசமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். தமிழை சரளமாக ஆங்கிலம் கலக்காமல் மிகவும் தெளிவான உச்சரிப்புடன் பேசுவதுதான் இவரது ப்ளஸ் பாயிண்ட்.

- Advertisement -

கோபிநாத்தின் திரைப்பயணம்:

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் கோபிநாத் அவர்கள் சினிமாவில் காலடி வைத்தார். இவர் பல படத்தில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் நீயா நானா கோபிநாத் அவர்கள் துப்புரவு தொழிலாளர்களின் கஷ்டங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக ஒரு முயற்சியை மேற்கொண்டு செய்து காட்டியுள்ளார். தொகுப்பாளராக இருந்த கோபிநாத் தற்போது துப்புரவு தொழிலாளியாகவும் மாறியுள்ளார். இவர் துப்புரவு தொழிலில் ஈடுபடும் ஒருவரை சந்தித்து அவரின் அன்றாட நிகழ்வுகளை தெரிந்துகொண்டு ஒருநாள் அவர்கள் செய்யும் வேலையை அவர்களுடன் சேர்ந்தும், அவர்கள் உபயோகப்படுத்தும் வாகனத்தை பயன்படுத்தி ஒரு துப்புரவு தொழிலாளி ஆகவே அந்த வழியை உணர்த்தியுள்ளார் கோபிநாத்.

Vijay Tv Neeya Naana Gopinath Debut Movie As Hero

துப்புரவுத் தொழிலில் ஈடுபட்ட கோபிநாத்:

மேலும், துப்புரவுத் தொழிலாளியின் உழைப்பு எத்தனை மகத்தானது என மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள். துப்புரவு பணி காலை ஏழு மணிக்கு ஆரம்பித்து மதியம் ஒரு மணியளவில் முடிகிறது. அவர்களின் வாகனத்தை ஓட்டுவது, மக்களிடமிருந்து குப்பையை சேகரிப்பது, அவருடன் உரையாடுவது என தொழிலாளியாகவே கோபிநாத் பயணம் செய்திருக்கிறார். மேலும், துப்புரவு தொழிலாளர்களின் வேலையை சுலபமாக மாற்றும் விதமாக அவர்களுக்கு புதியதொரு பேட்டரி வாகனம் கொடுக்கப்பட்டுள்ளது. டெம்போ போன்ற வடிவில் அந்த வாகனம் உள்ளது. ஒருவர் மட்டும் தான் அந்த வாகனத்தில் அமர முடியும். வண்டியின் பின்புறம் குப்பை கொட்டுவதற்கு சில குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் மக்கும், மக்காத குப்பை என பிரித்து வைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

பேட்டரி வாகனம் பற்றிய தகவல்:

அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்னர் துப்புரவு வண்டி வரும் போது தொழிலாளர்கள் கையில் ஒரு விசில் அடிப்பார்கள். மக்கள் வெளியே வந்து குப்பை கொட்டுவார்கள். ஆனால், அதில் சில உடல் உபாதைகள் இருந்தது. தற்போது விசிலுக்கு பதிலாக ஒரு பாடல் போட்டு வருகிறது. இது நம்ம ஊர் என துவங்கும் இந்த பாடலை கேட்டதும் மக்கள் வெளியே வந்து குப்பைகளை தரம் பிரித்து தருகிறார்கள். இந்த பாடலை கம்போஸ் செய்தார் சச்சின் சுந்தர். 24 மணி நேரத்தில் இந்த பாடலுக்கான டியூன் போட்டு கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னும் பின்னும் செல்லக்கூடிய இந்த வாகனம் பேட்டரியால் ஓடும்படி உருவாக்கப்பட்டது. இந்த பேட்டரி வண்டிகள் சென்னை நகரம் முழுவதும் குறைந்தபட்சம் 5,000 இருக்கின்றது. சென்னை சுத்தமாக இருக்க இந்த வாகனங்கள், இவைகளை இயக்கம் துப்புரவு தொழிலாளர்கள் தான் காரணமாக உள்ளனர்.

துப்புரவு தொழில் பணியில் கோபிநாத்தின் அனுபவம்:

இப்படிக்கு துப்புரவு தொழிலாளர்களின் வாழ்க்கை, அவர்கள் உபயோகிக்கும் பேட்டரி வாகனத்தை பற்றியும் தெரிந்து கொண்டுள்ளார் கோபிநாத். இந்த வண்டியை கோபிநாத்தின் மகள் பூச்சி வண்டி என்று அழைப்பதாக கூறியிருக்கிறார். அந்த வண்டியில் கோபிநாத் ஒரு ரவுண்ட் அடித்து, ஒரு நாள் முழுவதும் அவர்களோடு துப்புரவுப் பணியில் ஈடுபட்டு அவர்களுடன் இருந்த அனுபவத்தை கோபிநாத் பதிவு செய்து இருக்கிறார். அதில், ஒரு நாள் வேலையே இவ்வளவு களைப்பாக இருக்கிறது. நிறைய தண்ணீர் குடியுங்கள். ஒவ்வொரு துப்புரவு தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் நமக்காக நமது சுற்றுப்புறத்தை தூய்மை செய்து கொண்டிருக்கிறார்கள். முடிந்தால் அவர்களுக்கு அவ்வப்போது தண்ணீரை கொடுங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும், கோபிநாத்தின் இந்த முயற்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது தொடர்ந்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement