சிறுநீரகம் செயலிழப்பு, வாரம் இரண்டு முறை டயாலிசிஸ், மாதம் மட்டும் இவ்ளோ செலவாகும், எல்லாம் அவ தான் பாக்குறா – கலங்கிய நீயா நானா தந்தை.

0
569
Neeyanaana
- Advertisement -

குடும்பத்துக்காக போராடும் பாரதி என்ற பெண்ணை நீயா நானா நிகழ்ச்சி மூலம் விமர்சிக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சி தான் “நீயா நானா”. நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லிவிடும். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.அதிலும் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

-விளம்பரம்-

ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா”. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், கடந்த இரண்டு வாரமாக நீயா நானா நிகழ்ச்சி தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

- Advertisement -

அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள்:

கடந்த ஞாயிற்று கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாரதி என்ற பெண் ஒருவர் தன் கணவருக்கு படிக்கத்தெரியாது, மகளின் ரேங்க் கார்டை கூட அவர் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவார் என்று ஏளனமாக பேசி இருந்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர், நான் பள்ளியில் படிக்கும் போது 7 மார்க், 8 மார்க்னு வாங்குவேன். ஆனால், என் மகள் 80, 90 மார்க் வாங்குவதை பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கிறது.

படிக்காத தந்தையின் ஏக்கம் :

அதனால் தான் ஒரு மணிநேரம் பார்க்கிறேன் என்று கூறி வெகுளியாக கூறி இருந்தார். தன் மகள் வாங்கிய மதிப்பினை ஒரு அப்பன் ஒரு மணி நேரம் பார்க்கிறானே அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அந்த பெண்ணை கோபிநாத் கேட்டதற்கு அவர் ஏ பி சி டி தான் படித்துக் கொண்டிருப்பார். அவர் இன்னும் 90ஸ்ல தான் இருக்கார் என்று கேலி செய்ய உடனே கோபிநாத் அந்த பெண்ணின் மகளை அழைத்து அவருக்கு சிறந்த அப்பா என்று பரிசையும் வழங்கினார். பின் அந்த மகளும் என் அப்பா தோற்கவில்லை. அவர் எனக்காக தான் கஷ்டப்படுகிறார் என்று கண்ணீர் மல்க கூறியது பலரை கண்ணீரில் ஆழ்த்தி இருந்தது.

-விளம்பரம்-

கணவர் அளித்த பேட்டி:

இந்த எபிசொட் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சூப்பர் அப்பா என்று பலரும் அந்த தந்தையை பாராட்டி வருகின்றனர். அதே போல தன் கணவரை ஏளனம் செய்த அந்த பெண்ணை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் பலரும் பாரதியை விமர்சித்து கமெண்ட்களை போட்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பாரதி குறித்து நெகட்டிவான விமர்சனங்கள் வந்ததால் தாங்க முடியாமல் பாரதி மனமுடைந்து அழுதார். இந்நிலையில் இது தொடர்பாக அவள் கணவர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, என்னுடைய பெயர் சீனி ராஜா. நான் தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவன். 2002 ஆம் ஆண்டு சென்னையில் மளிகை கடையில் வேலை பார்க்க சென்றேன்.

neeya

வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள்:

பின் மளிகை கடையில் இருந்து தனியாக வந்து பல தொழில்கள் செய்தேன். ஆனால், எல்லாமே நஷ்டத்தில் முடிந்தது. மீண்டும் மளிகை கடைக்கு வேலைக்கு வந்தேன். இதற்கு நடுவில் தான் எனக்கும் பாரதிக்கும் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின்பு அவள் நகைகளை வைத்து புதிதாக தொழிலை தொடங்கி இருந்தேன். ஆனால், எல்லா தொழிலுமே நஷ்டத்தில் முடிந்தது. வேறு வழியில்லாமல் என் மனைவி வேலைக்கு சென்றாள். பின் குடும்ப சூழ்நிலைக்காக அவள் வேலைக்கு செல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டாள். என்னுடைய கிட்னி இரண்டும் சுருங்கிய காரணத்தினால் எனக்கு வாரத்திற்கு இரண்டு முறை டயாலிஸ் செய்யும் நிலைமை ஏற்பட்டது. இதற்காக அவள் சம்பாதித்து தீர வேண்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டாள்.

பாரதி குறித்து சொன்னது:

மாதம் 20 ஆயிரம் ரூபாய் என்னுடைய மருத்துவ செலவுக்கே தேவைப்படுகிறது. இதனால் குடும்ப பாரம் முழுவதையும் பாரதி சுமக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. என்னுடைய அப்பா, மனைவியும் இல்லை என்றால் நான் இல்லை. என்னுடைய வீட்டின் முதுகெலும்பாக என்னுடைய மனைவி தான் இருக்கிறார். அவள் எப்போது போலும் தான் இருக்கிறார். என்னை நம்பி வந்த பெண்ணை உட்கார வைத்து சோறு போடாமல், என் குழந்தையை பாதுகாக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன். அவள் வீட்டில் விளையாட்டாக பேசுவதை போல தான் நிகழ்ச்சியிலும் பேசினாள். அதை பலரும் தவறாக புரிந்து கொண்டு சர்ச்சையாக மாற்றி விட்டார்கள். என்னுடைய மருத்துவ செலவையும், குடும்பத்தையும் அவள் தான் நடத்தி வருகிறார். ஆனால், அவரை வில்லியாக இந்த சமூகம் மாற்றி இருக்கிறது என்று சீனி ராஜா பேட்டி அளித்திருந்தார்.

Advertisement