அத்தனை வலியையும் மறைத்து வேலைக்கு போறான் – நீயா நானா சிறுவன் ரமேஷ் தாயின் உருக்கமான பேச்சு

0
345
- Advertisement -

நீயா நானா பிரபலம் ரமேஷ் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது ‘நீயா நானா’ நிகழ்ச்சி தான். நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி தான் ‘நீயா நானா’.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இப்படி கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் ஒரு சில நிமிடம் வந்து சென்றாலுமே, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் வாழை படம் வெளியாகி மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக வந்ததால், படித்துக் கொண்டே வேலைக்குச் செல்லும் மாணவர்கள் Vs மாணவர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்கள்.

- Advertisement -

நீயா நானா நிகழ்ச்சி :

அதில் ஒரு சிறுவன், நான் நன்றாக படித்து VAO அதிகாரி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால், எனது அப்பா இறந்த பிறகு அரசாங்கத்தில் பணம் கொடுத்தார்கள். அந்தப் பணத்தை பெறுவதற்கு, அதிகாரிகள் கையெழுத்து போட என்னை ஒரு வாரமாக அலைய வைத்தார்கள். அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால், நான் VAO அதிகாரியாகி யாரையும் அலைய வைக்காமல் உடனே கையெழுத்து போடுவேன் என்றார். பின் இந்த நிகழ்ச்சியில் சிறுவனின் பெற்றோர்கள் கலந்து தங்களின் குடும்ப சூழ்நிலைகளை சொல்லி இருந்தார்கள்.

சிறுவன் அளித்த பேட்டி :

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி பார்ப்போரின் மனதை உறைய வைத்தது. அதோடு, அந்த சிறுவன் பேசிய வீடியோ மிக பெரிய வைரலாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய அந்த சிறுவனுடைய பெயர் ரமேஷ். இவர் கோவில்பட்டியை சேர்ந்தவர். இவர் பள்ளிக்கு சென்று வந்த நேரம் பிறகு பழ மூட்டைகளை தூக்கி வேலை செய்கிறார். அதன் மூலம் வரும் பணத்தை வைத்து தன்னுடைய குடும்பத்திற்கு உதவி செய்கிறார். இதை அடுத்து பேட்டியில் ரமேஷ், பள்ளி -வேலை இரண்டுமே முடித்த பிறகு 3 கி மீ வீட்டிற்கு நடந்தே போவேன். அம்மாவிற்கு எலும்பு தேய்மான பிரச்சனை இருக்கிறது.

விஜய் செய்த உதவி :

அவருக்கு ஒரு நல்ல மெத்தை வாங்கி தர வேண்டும். அப்பாவின் உடைய கஷ்டத்தை குறைக்க உதவ வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார். இப்படி இந்த சிறுவன் பேசியதை இன்னும் இணையத்தில் வைரலாகி இருந்தது. இதை இசையமைப்பாளர் தமன் பார்த்து, நான் இந்த சிறுவனுக்கு ஒரு இருசக்கர வாகனம் வாங்கி தருகிறேன். நிச்சயம் இந்த சிறுவன் எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வந்து தன்னுடைய அம்மாவை பார்த்துக் கொள்வான் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார்.

சிறுவனின் அம்மா அளித்த பேட்டி:

இதை தொடர்ந்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், அந்த சிறுவனுடைய குடும்பத்திற்கு உதவி செய்திருக்கிறார்கள். இதை அடுத்து சிறுவனின் தாய் பேட்டியில், எங்களுடைய வீடியோவை பார்த்து உடனே விஜய் உதவி செய்ததற்கு நன்றி. விஜய்யின் சார்பாக எங்களிடம் நலம் விசாரித்த புஸ்ஸி ஆனந்த் அண்ணனுக்கு நன்றி. தமிழக வெற்றி கழகம் கோவில்பட்டி சட்டமன்ற நிர்வாகிகளுக்கு நன்றி. தேவையான ஒரு மாதம் மளிகை, காய்கறி, மெத்தை, 25,000 பணம், என் மகனுடைய பள்ளி, கல்லூரி படிப்பு செலவை என அனைத்தையுமே ஏற்று இருப்பதாக கூறியிருக்கிறார்கள். விஜய் சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி என்று நெகிழ்ச்சியாக பேசியிருக்கிறார்.

Advertisement