தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லரில் ஒரு mallலை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். இந்த தீவிரவாத கும்பலில் இருந்து விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது. கடத்தல் பாணியில் கதை செல்கிறது. இந்த படத்தின் அரபிக்குத்து பாடல், ஜாலியோ ஜிம்கானா வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள். மேலும், பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நெல்சன் அவர்கள் பிரபல பத்திரிகைக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவரிடம் பீஸ்ட் படம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது.

செல்வராகவன் எப்படி படத்துக்குள் வந்தார்:

சாணி காகிதம் படத்தில் செல்வராகவன் சார் நடிக்கிறார் என்று தெரிந்ததும் எனக்கு எடக்கு மடக்காக பேசும் வட இந்திய அதிகாரி கதாபாத்திரத்துக்கு அவரை கேட்டு பார்க்கலாம் என்று தோன்றியது. அதற்கு பிறகு அவரிடம் பேசினேன். அவரும் உடனே ஒப்புக்கொண்டார். அவரது கதாபாத்திரம் ரொம்பவே ஆர்வம் ஊட்டும் விதமாக வந்துள்ளது. ஸ்லாம் டாக் மில்லியனர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரம் வரும். அந்த கதாபாத்திரத்தின் தாக்கத்தில் உருவானது தான் மாதவ் சிங் கதாபாத்திரம்.

Advertisement

கூர்கா படத்தின் காப்பி என்று பீஸ்ட் படத்தை கலாய்த்து வருவது எப்படி எதிர்கொண்டீர்கள்:

யோகி பாபுவின் கூர்க்கா படத்தின் இயக்குனர் சாம் ஆண்டனை எனக்கு நன்றாகவே தெரியும். கதை சொல்லும்போது கூர்கா படம் பற்றி சொன்னார்கள். அதில் ரெடின் கிங்ஸ்லியும் நடித்து இருந்தார். அப்போது அவர் என்னை அழைத்துப் போய் படத்தை காட்டினார். பின்னர் மீண்டும் எல்லோரும் படத்தை பார்த்தோம். பிரேக்கிங் பேட் வெப் தொடர் பற்றியும் சொன்னார்கள். அந்த தொடர் எனக்கும் பிடித்த ஒன்று தான். விமான கடத்தல், இதுபோல வணிக வளாகங்களை சுற்றி வளைத்து அங்கே வந்தவர்களை பிணைய கைதிகளாக வைக்கும் கதைகளை கொண்ட படங்கள் உலகம் முழுவதும் வந்துள்ளது. இது ஒரு ஜானர். வேறு ஒரு கதையோ, திரைக்கதையோ இதில் இருக்காது. இந்த படம் தரும் அனுபவமே வேற ஒன்றாக இருக்கும்.

Advertisement

ட்ரெய்லரில் மொத்த கதை சொன்னதை குறித்து கூறுங்கள்:

ஒரே இடத்தில் நடக்கும் கதையை ஓபன் ப்ளே சொல்லி ரசிகர்களை திரையரங்குக்கு அழைப்பது தான் இந்த படத்தைப் பொருத்தவரை சரியாக இருக்கும் என்பதால் அப்படி செய்திருக்கிறோம். இந்த கதையை சர்ப்ரைஸ் என்ற பெயரில் மறைப்பது தான் காமெடியாக ஆகிவிடும்.

ட்ரைலரில் ‘காவி’ வண்ணம் கொண்ட பேனர் சர்ச்சை குறித்து கூறியது :

அய்யய்யோ! காவி கலரையோ, வேறு யாரையுமோ காயப்படுத்தவில்லை. அதில் எந்த குறியீடும் கிடையாது. அந்த காட்சி எடுக்கப்பட்ட நாளில் செட்டில் அடர்த்தியான ஆரஞ்சு கலரில் பிளக்ஸ் பேனர் இருந்தது. காவி வண்ணம் இன்னும் மென் தன்மையுடன் இருக்கும் என்று கூறினார்.

Advertisement