ஜெயிலர் படம் குறித்து இயக்குனர் நெல்சன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் நெல்சன் திலீப்குமார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஸ்கிரிப்ட் ரைடராக பணியாற்றி வந்த நெல்சன் பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் குழுவில் பணியாற்றி வந்தார். இவர் முதன்முதலாக சிம்பு மற்றும் ஹன்சிகாவை வைத்து ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தை எடுப்பதாக இருந்தார். ஆனால், சில காரணங்களால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது.

அதன்பின்னர் இவர் நயன்தாரா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து இவர் எடுத்த ‘டாக்டர்’ படமும் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், இறுதியாக இவர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இதனால் இவர் விஜய் ரசிகர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

Advertisement

ஜெயிலர் படம்:

இதனை தொடர்ந்து தற்போது இவர் ரஜினியை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்னன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நேற்று ஜெயிலர் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. மேலும், இந்த படம் முதல் நாளிலேயே உலக அளவில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

நெல்சன் பேட்டி:

இந்தப் படத்திற்காக நெல்சன் மெனக்கட்டிருப்பதை குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இந்த நிலையில் ஜெயிலர் படம் குறித்து நெல்சன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், நான் முதலில் மதியம் தான் படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. எல்லோரும் பயங்கரமாக செலப்ரேட் பண்ணிட்டு இருந்தார்கள். தியேட்டரில் பார்க்கும்போது வேற மாதிரி படம் இருக்கு. ரொம்ப சந்தோசமாக இருக்கு. அந்த மொமென்ட்ஸ்காக தான் ரஜினி சார் வைத்து படம் பண்ணேன். நான் முதன்முதலில் அண்ணாமலை படம் பார்த்தேன். அவர் சூட் போட்டுட்டு டோர் ஓபன் ஆகும் போது நின்னுட்டு இருக்கிறது தான் என்னுடைய ஃபேவரிட் ரஜினி சாட்.

Advertisement

படம் குறித்து சொன்னது:

அதற்குப் பிறகு பாட்ஷா. அந்த இரண்டு படம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். எனக்கு எப்படி அவரை பார்த்து பிடித்ததோ, அண்ணாமலை, பாட்ஷா மாதிரி அதில் பாதியாவது கிரியேட் பண்ணனும்னு தான் நினைத்தேன். இந்த படத்தோட பேசிக் ஐடியாவே அது தான். இன்டர்வெல் பிளாக், கிளைமாக்ஸ் இன்னும் நிறைய மொமென்ட்ஸ் பயங்கரமாக இருந்த மாதிரி பீலாச்சு என்று நிறைய பேரு சொன்னார்கள். ப்ரொடியூசர் எல்லாரும் நிறைய இடத்தில் “Goosebumps” வந்துச்சு என்று நிறைய இடத்தில் சொன்னார்கள் முதலில் கோலமாவு கோகிலா பார்த்துவிட்டு என்னை கூப்பிட்டு பாராட்டினார்கள்.

Advertisement

நடிகர்கள் குறித்து சொன்னது:

மேலும், பெரிய நடிகர்களோட படம் பண்ணும் போது பிரஷர் இருக்கும். இப்போ விஜய் சார், ரஜினி சார் எல்லாம் படம் வைத்து படம் பண்ணும்போது படத்தை தாண்டி அவர்களுக்காகத்தான் தியேட்டருக்கு ஆடியன்ஸ் வருவார்கள். விமர்சன ரீதியாக ஒரு நல்ல படம் எடுக்கணும் என்றால் அதற்கு பெரிய ஸ்டார் தேவையே இல்லை. இப்போ நீங்க நடிக்கலாம், நான் நடிக்கலாம், யாரை வேணும்னாலும் வைத்து சின்ன பட்ஜெட்டில் ஒரு நல்ல படம் பண்ண முடியும்.

ஆனால், பெரிய நடிகர்களோட பண்ணும் போது அவர்களுடன் தேவைகள் வேறு, ஆடியன்ஸ் தேவைகளும் வேறு. அதற்கு ஏற்ற மாதிரி படம் பண்ண வேண்டும். அதை எப்படி வித்தியாசமா புதுசா பண்ணுவோம் என்பது தான் ஐடியா. அந்த பிரஷர் இருக்கும்போது நாம சில விஷயம் காம்ப்ரமைஸ் பண்ணுவோம். சில விஷயங்கள் பண்ண முடியாது. அதுதான் இதில் இருக்கிற பிரஷர் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement