தன் முதல் படம் வெளியான முன்பே ரஜினி – விஜய் – சிவகார்த்திகேயன் பங்கேற்ற நிகழ்ச்சியை இயக்கி இருக்கும் நெல்சன். தற்போது வைரலாகும் வீடியோ.

0
442
nelson
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். விஷுவல் கம்யூனிகேஷன் என்ற இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தராக பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சின்னத்திரையில் மிக பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு நெல்சன் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதோடு இவர் சின்னத்திரையில் தயாரிப்புக் குழுவில் ஒருவராகவும் பணி ஆற்றியிருக்கிறார். இப்படி சின்னத்திரையில் கொடிகட்டிப் பறந்தாலும் வெள்ளித்திரையில் இவரால் தடம் பதிக்க முடியவில்லை. இவர் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு நடிகர் சிலம்பரசனை வைத்து வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தை இயக்குனார்.

-விளம்பரம்-

ஆனால், சில காரணங்களால் அந்த படம் பாதியிலேயே நின்றது. இதனால் மனம் உடைந்து சிலகாலம் நெல்சன் படம் இயக்காமல் இருந்தார். பின் 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கினார். அதுமட்டும் இல்லாமல் அனிருத் மூலமாகத்தான் இவருக்கு கோலமாவு கோகிலா படம் பண்ண வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் இவருடைய வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்தது என்று சொல்லலாம். காமெடி கமர்ஷியல் பாணியில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. பிறகு தமிழ் திரை உலகில் மிக பிரபலமான இயக்குனராக ஆனார்.

- Advertisement -

பீஸ்ட் படம் :

அதனைத் தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. டாக்டர் படத்தில் பெண்கள், குழந்தைகள் கடத்தல் என சீரியசான பிரச்சினைகளை கொண்டிருந்தாலும் இதற்கிடையில் காமெடி கொண்டு வந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்தது. அதுவும் கொரோனா காலத்தில் இந்த மாதிரியான சீரியஸ் கலந்த காமெடி படம் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி தந்தது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது படமாக தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி இருக்கிறார்.

நெல்சனின் 4வது படம்:

இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி சினிமா உலகில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு விடாது உழைத்த நெல்சன் தன்னுடைய 4 வது படமாக ரஜினிகாந்துடன் சேர்ந்து இருக்கிறார். பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சனின் அடுத்த படம் குறித்த கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் நெல்சன் தன்னுடைய அடுத்த படத்தை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

நெல்சன்-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணி:

அதேபோல் சமீபத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். தற்போது டபுள் ட்ரீட் என்பது போல் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து படம் பண்ணுகிறார்கள். தற்போது இந்த தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. தற்போது நெல்சன் ஸ்டார் நாயகர்களின் ஃபேவரைட் இயக்குனராக திகழ்கிறார் என்று சொல்லலாம். தன்னுடைய நான்காவது படத்திலேயே சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படம் ‘தலைவர் 169’. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

May be an image of 3 people and text that says "EHIND TALKIES Thalaivar 169 BEHIND TALKIES சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரின் 169வது படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார்."

மூன்று ஜெனரேஷன் ஸ்டார்களை இயக்கிய நெல்சன்:

அந்த வீடியோவில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிரூத் மூவரும் செம்ம மாஸாக இருக்கின்றார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று, சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் இவர் சின்னத்திரையில் பணியாற்றி இருக்கும் போது மூன்று ஜெனரேஷன் சூப்பர் ஸ்டாரான ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் ஒரே மேடையில் தோன்றிய ஒரு அவார்டு நிகழ்ச்சியை 2016ல் இயக்குனராக இருந்து இயக்கியிருந்தார். இன்று அதே 3 ஜெனரேஷன் சூப்பர் ஸ்டார்களை வைத்து நெல்சன் படம் இயக்கி இருக்கிறார். இது எந்த ஒரு இயக்குனருக்கும் கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு என்று சொல்லலாம். நெல்சனின் வளர்ச்சி சும்மா தாறுமாறு வேறு மாரியாக இருக்கிறது. இதை ரசிகர்கள் பலரும் கொண்டாடி பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement