தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது அதே பாணியில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து வந்த ரியோ ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.

கதைக்களம் :

Advertisement

படத்தில் ரியோ மற்றும் ஆர் ஜே விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நாசா முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருக்கிறார் நாஞ்சில் சம்பத். இவரது இரு பிள்ளைகளான ரியோ,ஆர் ஜே விக்னேஷ் இருவரும் அரசியலில் ஈடுபட்டு தங்களது கட்சியை பெரிய கட்சியாக மற்ற வேண்டும் என்று களமிறங்குகிறார்கள்.

ஆரம்பத்தில் விளையாட்டு தனமாக அரசியலில் குதிக்கும் ரியோ மற்றும் ஆர் ஜே விக்னேஷ் பின்னர் அரசியலில் இருக்கும் ஆபத்துக்களையும் உணர்கின்றனர். பின்னர் விளையாட்டாக ஆரம்பித்த இவர்களது அரசியல் பயணம் பின்னர் உண்மையான மக்கள் பிரச்சனைகளை அறிந்து இவர் இருவரும் எப்படி மாறுகிறார்கள் என்பது தான் மீதிக்கதை.

இதையும் பாருங்க : சர்ச்சையான பாகிஸ்தானின் விளம்பரம்.! உள்ளாடையை கழற்றி பதிலடி கொடுத்த பூனம் பாண்டே.! 

Advertisement

வாரிசு அரசியல், டெல்லி விவசாயிகள் பிரச்சனை , ஓட்டளிக்க பணம் கொடுப்பது , காட்டை அழித்து கோவில் கட்டுவது, பாத பூஜை செய்வது . கச்சத் தீவு பிரச்சனை , நீட் அனிதா, #metoo, நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு என்று அனைத்தையும் இந்த படத்தில் முன்னிறுத்தியுள்ளனர். அதனை காமெடி கலந்த படமாக இந்த படத்தை இயக்கியுள்ளனர்.

Advertisement

ப்ளஸ் :

ரியோவிற்கு இது முதல் படம் என்றாலும் கைதேர்ந்த நடிகரை போல நடித்துள்ளார் ரியோ. இதனால் புதிய நடிகரை பார்க்கிறோம் என்ற சலிப்பு ஏற்படாமல் இருப்பது படத்தின் பலம், மேலும், இதுவரை யூடுயுபில் கலக்கி வந்த பன் பண்றோம் சித்து மற்றும் ராம் நிஷாந்த் படத்தின் செய்யும் காமெடிக்கல் அசத்தல். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சொல்லி இருக்கும் மெசேஜ் மிகவும் சிறப்பு.

மைனஸ் :

படத்தின் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோ. மேலும், பாடல்கள் நாம் படம் பார்த்து விட்டு வெளியே வந்துதவுடன் மறந்துவிடும் அளவிற்கு இருக்கிறது. ஒரு சில காமெடி காட்சிகள் நம் பொறுமையை சோதிக்கிறது. மேலும், படத்தில் மயில் சாமி மற்றும் ராதா ரவியை பெரிதாக பெரிதாக பயன்படுதில்லை என்று தோன்றுகிறது.

மைனஸ் :

படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாகவே நகர்கிறது. சொல்லப்போனால் முதல் பாதியில் சிரிக்க வைக்கும் கட்சிகளுக்கு மிகவும் சிரமப்பட்டுள்ளனர், ஒரு சில பிரேம்கள் நமக்கு சலிப்பை தந்து விடுகிறது. இன்னும் கொஞ்சம் திரைக்கதை மற்றும் ஒளிபரப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இறுதி அலசல் :

எப்படி தமிழ் சினிமாவில் குறும் படங்களை இயக்கிய பல இயக்குனர்கள் தற்போது சினிமாவில் இயக்குனர்களாக ஜொலிக்கிறார்களோ விரைவில் யூடுயூபர்களின் கூட்டமும் தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக அவதாரம் எடுப்பார்கள் என்பதற்கு இந்த படம் ஒரு ஆரம்ப புள்ளியாக அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த படம் யூடுயூபர்களின் ஒரு நல்ல தொடக்கம் என்று கூறலாம்.

Advertisement