இதுவரை எந்த படத்திற்கும் இல்லை.! நேர்கொண்ட பார்வைக்கு கிடைத்த முகநூல் அங்கீகாரம்.!

0
506

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சதுரங்க வேட்டை ,தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறா.ர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

இந்தப் படம் இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான படத்தின்’பிங்க்’ படத்தின் ரீமேக் என்பது நம் அனைவருக்கும் தெரியும். வினோத் குமார் முதலில் தனது சொந்த கதையில் தான் இந்த படத்தை எடுப்பதாக இருந்தார். ஆனால்,பிங்க் படத்தின் ரீமேக்கை வாங்கியதால் போனி கபூர் இந்த படத்தை எடுக்குமாறு வினோத்குமாரும் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்திற்கும் வினோத் குமார் இயக்குனராக கமிட் செய்வதாக போனி கபூர் உறுதியளித்துள்ளா.ர் இந்த படம் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக இந்த படத்திற்கு பல்வேறு புரமோஷன் வேலை செய்து வருகிறார் போனி கபூர்.

அதன் முதற்கட்டமாக இந்த படத்திற்காக அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தை தொடங்கியுள்ளார் போனி கபூர். இதுவரை எந்தவொரு அஜித் படத்திற்கும் இதுபோன்ற ஒரு அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் தொடங்கப்படவில்லை. இதில் ஆச்சரியம் என்னவெனில் தொடங்கு தொடங்கப்பட்ட ஒரு சில நாளிலேயே நேர்கொண்ட பார்வை பக்கத்திற்கு ப்ளூ டிக் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement