நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ராஜமௌலியின் ஆவணப்படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ராஜமௌலி. இவர் தெலுங்கு மொழியில் தான் புகழ்பெற்ற பல படங்களை இயக்கியிருக்கிறார். இவர் முதன் முதலில் ‘ஸ்டூடன்ட் நம்பர் 1’ என்ற படத்தை தான் இயக்கியிருந்தார்.
அதனை தொடர்ந்து இவர் சிம்ஹத்ரி, சை, சத்ரபதி போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இருந்தாலும், இவரை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியது ‘மாவீரன்’ படம் தான். இந்த படத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் நடித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இவர் ‘நான் ஈ’ என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. பின் இந்திய சினிமாவில் எத்தனையோ பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகி இருந்தாலும், ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தது ‘பாகுபலி’ திரைப்படம் தான்.
ராஜமௌலி திரைப்பயணம்:
கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றித் தந்தது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படமும் மாபெரும் வெற்றியை பெற்று வசூல் சாதனையை படைந்தது. இதனை அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் ‘RRR’. இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியாகி இருந்தது.
One man. Numerous blockbusters. Endless ambition. What did it take for this legendary filmmaker to reach his peak? 🎥🎬
— Netflix India (@NetflixIndia) July 6, 2024
Modern Masters: S.S. Rajamouli, coming on 2 August, only on Netflix!#ModernMastersOnNetflix pic.twitter.com/RR9lg7qTTu
RRR படம்:
RRR – இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆகும். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சமீபத்தில் தான் ராஜமௌலிக்கு RRR படத்திற்கான ‘ஆஸ்கர் விருது’ கிடைத்திருந்தது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இதனை அடுத்து ராஜமௌலி- மகேஷ்பாபு கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது. தற்போது அதற்கான வேலைகளில் ராஜமௌலி ஈடுபட்டு வருகிறார்.
ராஜமௌலி ஆவணப்படம்:
மேலும், இந்த படத்தில் மலையாள நடிகர் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜமௌலியின் ஆவணப்படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமா உலகில் ராஜமௌலியின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் ஆவணப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ராஜமௌலியின் பிறந்த நாள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த படம் மொத்தம் ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள் கொண்டது. பிரபல விமர்சகர் அனுபமா சோப்ரா வாய்ஸ் ஓவரில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
படம் குறித்த அப்டேட்:
இதற்கு ‘மார்டன் மாஸ்டர்ஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ராஜமௌலி எப்படி இந்திய சினிமாவில் புரட்சியை செய்திருக்கிறார், சர்வதேச சினிமாவில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார், திரைக்குப் பின்னால் ராஜமவுலி எப்படி, அவருடைய பயணம் என்ன, பிரபலங்களின் பேட்டி, ராஜமௌலி குறித்து பலரும் தெரியாத சில விஷயங்களையும் காண்பித்திருக்கிறார்கள். இந்த தகவல் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் படத்தின் ரிலீசாக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.