11.45க்கு மெர்சல் படத்தை பார்த்தால் 12 மணிக்கு இப்படி நடக்கும் – netflix கொடுத்த சர்ப்ரைஸ்.

0
1173

தமிழ் சினிமா உலகில் மாஸ் நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். இன்று விஜய்யின் 46வது பிறந்தநாள். இதை ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை பதிவிட்டு கொண்டாடி வருக்கிறார்கள். பொதுவாகவே ஜூன் 22ஆம் தேதி அன்று தமிழ்நாடே கோலாகலமாக இருக்கும். ஆனால், இந்த வருடம் கொரோனா பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்துப் போய் இருக்கிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தலை விரித்து கொண்டு கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டு இருப்பதால் மக்களின் இயல்பு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விஜய் பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போனது.

தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இவரது ரசிகர்கள் சிலர் விஜயை கடவுளாகவும், தங்களது வீட்டின் ஒருவராகவும் எண்ணிவருகிறார்கள். மேலும், தளபதி விஜய்யின் பிறந்த நாளை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பல ஹாஸ் டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட்டிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் இந்தியா தற்போது ட்விட்டரில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளது.

- Advertisement -

அதில் அவர்கள் மெர்சல் திரைப்படத்தை 11.45 மணிக்கு பார்க்கத்தொடங்கினால் உங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களைப் பெறுவதற்காக தளபதி விஜய் 12 மணிக்கு உங்கள் வீடுகளில் நுழைவார் என்று பதிவிட்டு மெர்சல் படத்தின் காட்சியின் giphy வகை படத்தைப் பதிவிட்டு வாழ்த்தியிருக்கிறது. தற்போது இது புது ட்ரெண்ட்டை உருவாகி வருகிறது. Netflix India. பாட்டுப்பாடி அப்லோட் செய்தும், நடனமாடியும், ஓவியம் வரைபவர்கள் வரைந்தும் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து ட்ரிப்யூட் வீடியோக்களை உருவாக்கி வருகிறார்கள்.

Image

-விளம்பரம்-

பிகில் படத்தைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இந்த மாஸ்டர் படத்தின் பாடல்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement