‘கையேந்திய ஏழை குழந்தைகள், கைவிரித்த ராஷ்மிகா’ – national crush-ஐ திட்டி தீர்த்து வரும் நெட்டிசன்கள். வைரல் வீடியோ

0
827
Rashmika
- Advertisement -

கைகளை நீட்டி உதவி கேட்க சிறுமியை புறக்கணித்து சென்ற ராஷ்மிகா மந்தனா வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் ராஷ்மிக மந்தனா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கொள்ளையடித்தார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர்.

-விளம்பரம்-

இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். தமிழில் கார்த்தி உடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இப்படி இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

புஸ்பா படம் பற்றிய தகவல்:

சமீபத்தில் புஷ்பா என்ற படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து உள்ளார். இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். சுனில் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும், ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

rashmika

வைரலாகும் ராஷ்மிகா மந்தனா வீடியோ:

அதோடு இந்த படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்து இருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா பல மொழி படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவிடம் சிறுமி ஒருவர் கைகளை நீட்டி உதவி கேட்டும் அதை கண்டுகொள்ளாமல் காரில் ஏறி சென்ற வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

ராஷ்மிகா செய்த காரியம்:

மும்பை ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ராஷ்மிகா மந்தனாவை பார்த்து ஒரு குழந்தை தனக்கு சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று நடிகையிடம் கேட்டிருக்கிறார். அந்த சிறுமி பழைய ஆடையை அணிந்து பட்டினியால் தவித்து இருக்கிறார். ஆனால், ராஷ்மிகா தன்னிடம் எதுவும் இல்லை என்று சைகை செய்திருக்கிறார். இருந்தாலும் அந்த குழந்தை ராஷ்மிகா பின்னாடியே செள்கிறது. இருந்தும் ராஷ்மிகா அந்த குழந்தையை புறக்கணித்து விட்டு காரில் அமர்ந்து செல்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து நெட்டிசன்கள் முதல் ரசிகர்கள் பலரும் கடுமையாக கண்டித்து விமர்சித்து வருகிறார்கள்.

ராஷ்மிகாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:

அதிலும் பலர், இந்திய திரையுலகில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருக்கும் ராஷ்மிகாவிடம் எதுவுமில்லை என்று எப்படி கூற முடிகிறது? இது ஆச்சரியமாக இருக்கிறது. அவருடைய படங்களை பார்ப்பதை நிறுத்த வேண்டும். அதன் மூலம் அவருக்கு ஒரு நல்ல பாடம் கிடைக்கும் என்றும் ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது. ஆனால், நல்ல மனது இல்லை என்றும் விமர்சித்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். தற்போது இது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து ராஷ்மிகா மந்தனா தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement