என்ன இது அப்படியே இருக்கு? GOAT படத்தின் கதை போலவே இருக்கும் கேப்டனின் படம். இதுக்கு தான் அந்த Tributeஆ?

0
283
- Advertisement -

‘கோட்’ படம் கேப்டன் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் விமர்சித்து வரும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் தான். அந்த வகையில், சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி உள்ளார்கள்.

-விளம்பரம்-

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

- Advertisement -

கோட் படம்:

கதையில், கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், தீவிரவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர, SAT squad டீம் களம் இறங்குகிறது. அதில் விஜய் (காந்தி), அஜய் (அஜய்), பிரசாந்த் (சுனில்), பிரபுதேவா (கல்யாண்) ஆகியோர் ஆயுதங்களுடன் களம் இறங்குகிறார்கள். அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மோகன் (மேனன்) இறந்து விடுவதாக காட்டப்படுகிறது. இதற்கிடையே, தாய்லாந்துக்கு தனது மனைவி (சினேகா) மற்றும் குழந்தையுடன் காந்தி செல்கிறார். அங்கு, காந்தி தனது மகனை பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது.

கோட் கதை:

ஆனால் கடைசியில், தனது மகனை காந்தி ஒரு பிரச்சனையில் சந்திக்கிறார். அந்தப் பிரச்சனை என்ன? காந்திக்கு வில்லனாக ஜீவன் (விஜய் மகன்) மாறியது எப்படி? என்பது தான் படத்தின் மீதி கதை. நீண்ட நாட்களாக சீரியஸான ரோல்களில் தோன்றிய விஜய், இந்த படத்தில் காதல், காமெடி, கிண்டல், எமோஷன், சைலன்ட், டான்ஸ், டயலாக் டெலிவரி என அனைத்திலும் தெரிக்க விட்டுள்ளார். குறிப்பாக விஜய்யின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அனைவருக்கும் ஒரு கூஸ்பம்ஸாக இருக்கிறது. ஆனால் படத்தின் கதை, மிகவும் பழைய கதை என்பது போல் விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

ராஜதுரை படம்:

கேப்டன் விஜயகாந்த் நடிப்பில், எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய படம் தான் ‘ராஜதுரை’. இப்படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து ஜெயசுதா, சிவரஞ்சனி, ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கதையில், போலீஸ் ஆபீஸர் விஜயகாந்தின் மகனை, பழி வாங்குவதற்காக வில்லன் மாயாண்டி கடத்தி, பின்னாளில் அவனை தன் தந்தைக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவான். தற்போது வெளியாகியுள்ள ‘கோட்’ படமும் கிட்டத்தட்ட இதே கதைதான்.

நெட்டிசன்கள் கிண்டல்:

அதனால் தற்போது எக்ஸ் தளத்தில், வெங்கட் பிரபு இந்த படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்துள்ளார் என்று பதிவிட்டு நெட்டிசன்கள் வருகின்றனர். மேலும், சில காட்சிகளும் மாறாமல் அப்படியே படமாக்கப்பட்டுள்ளது. கேப்டனை ஏஐ மூலம் கோட் படத்தில் கொண்டு வருவது அவருக்கு கொடுக்கிற Tribute என்று நினைத்தோம். ஆனால், அவரின் படத்தை காப்பி அடித்து உள்ளீர்களே இதுதான் உங்க Tribute ஆ என்று கோட் படத்தை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement