-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

படம் வந்தப்ப கூட இப்படி ட்ரெண்டிங் ஆகல – ட்விட்டர் சந்தில் துவைத்து எடுக்கப்படும் இந்தியன் 2

0
376

‘இந்தியன் 2’ Netflixல் இன்று வெளியான நிலையில், மீண்டும் நெடிசன்கள் விமர்சித்து இருக்கும் பதிவுகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தை மீண்டும் இயக்குனர் சங்கர்- கமல் எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, ஜெகன், பாபி சிம்ஹா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தியன் முதல் பாகத்தில் சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய சுதந்திர வீரர்களில் ஒருவர் சேனாதிபதி. இவர் லஞ்சம் ஊழலுக்கு எதிராக போராடுபவர். தற்போது, இரண்டாம் பாகத்தில் சித்தார்த் மற்றும் அவருடைய நண்பர்கள் ஆன ப்ரியா பவானி சங்கர், ஜெகன் ஆகியோர் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்கிறார்கள்.

இந்தியன் 2 படம்:

இதற்காக அவர்கள் போராடவும் செய்கிறார்கள். சித்தார்த் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டு வருகிறார். இருந்தும் ஒரு கட்டத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது, இந்தியன் தாத்தா தான் வர வேண்டும் என்று முடிவெடுக்கிறார். மேலும், ‘கம் பேக் இந்தியன்’ என்ற ஹேஷ் டேகை சோசியல் மீடியாவில் வைரலாகி, நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை சேனாதிபதிக்கு தெரிவிக்கும் வகையில் செய்கிறார்.

படத்தின் கதை:

கடைசியில், தைவானில் இருக்கும் இந்தியன் தாத்தா மீண்டும் இந்தியா செல்ல நினைக்கிறார். இந்தியாவிற்கு 28 ஆண்டுகள் கழித்து வரும் சேனாதிபதியை கைது செய்ய வீரசேகரன் என்ற போலீஸ் அலைந்து கொண்டிருக்கிறார். லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்கக் கூடாது என்று சேனாதிபதி மீண்டும் அவதாரம் எடுக்கிறார். இதனால் சேனாதிபதி என்னென்ன பிரச்சனைகளை சந்திப்பார்? குற்றவாளிகளை தண்டிப்பாரா? கடைசியில் என்ன நடந்தது? என்பது தான் மீதி கதை.

-விளம்பரம்-

நெடிசன்களின் ட்ரால்கள்:

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. சங்கர் திரைப்பயணதிலேயே இந்த படம் பெரும் தோல்வி என்று கூறப்படுகிறது. சங்கர் வேண்டா வெறுப்பா படம் எடுத்து போட்டால் இப்படித்தான் இருக்கும். கமலுக்கு மேக்கப் செய்து இருக்கிறார்கள் தவிர நடிப்பையே பார்க்க முடியவில்லை. படத்தின் பாடல்கள் மோசமாக உள்ளது. யாரும் இந்த படத்தைப் பார்க்க வேண்டாம் என்று #IndianDisaster ஹேஸ் டேகை சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள்.

ஓடிடியில் வெளியான இந்தியன் 2:

தற்போது ‘இந்தியன் 2’ படம் Netflix ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் ட்விட்டரில் கலாய்த்து தள்ளுகிறார்கள். மேலும், இந்தியன் 2 படம் தியேட்டரில் வெளியாகும் போது கூட இந்த அளவுக்கு ட்ரெண்டிங் ஆகவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு நெட்டிசன்கள் ட்விட்டர் சந்தில் துவைத்து எடுக்கிறார்கள். தற்போது அந்த வீடியோக்கள் தான் ட்விட்டரில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news