‘இது ஸ்டார்ட் மியூசிக் இல்ல, CWC கோமாளி’ – பிரியங்கா வாங்கிய பல்ப்

0
248
- Advertisement -

‘குக் வித் கோமாளி 5’ நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகிய நிலையில், பிரியங்கா மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் தாமுவுடன் மற்றொரு நடுவராக மாதம்ப்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்கள். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து குறைவான மதிப்பெண்களை பெற்று ஸ்ரீகாந்த் தேவா, வசந்த், ஜோயா, பூஜா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ் ஆகியோர் வெளியேற்றி இருந்தார்கள். இந்த வாரம் செமி பைனல் நடைபெற இருப்பதாகவும், இதில் பிரியங்கா, சுஜிதா, இர்பான், அக்ஷய் கமல் ஆகிய நான்கு பேர் மோத இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகி இருக்கும் தகவல் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி 5:

இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், நான் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இல்லை. நான் ரொம்ப நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், எப்போதும் என்னுடைய 100% முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுத்தேன். 2019 இல் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிறேன். அங்கிருந்து தான் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியின் பயணம் தொடங்கியது. ஆனால், சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமே கிடையாது. என்னுடைய வாழ்க்கையின் எல்லா நேரத்திலும் நான் அதை கண்டிப்பாக பின்பற்றி வருகிறேன்.

மணிமேகலை பதிவு:

புகழ், பணம், தொழில் வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுயமரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம் தான். அதனால் தான் நான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். ஆனால், அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கிடுகிறார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்து சொன்னது:

நான் யாரையுமே கஷ்டப்படுவதில்லை. பல எதிர்மறை, ஆதிக்கம் தான் இந்த நிகழ்ச்சியின் உடைய உண்மை முகத்தை மறைக்கிறது. இதற்கு முன்பு போல் இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி இல்லை. அதனால் தான் நான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை. நான் 2019 ஆம் ஆண்டு முதல் இந்தத் துறையில் இருக்கிறேன். இது என்னுடைய 15-வது ஆண்டுக்கான ஆங்கர். நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. ஆனால், இது போன்று என்னை யாரும் நடத்தியது கிடையாது. ஆனால், எனக்கு இதை செய்த நபருக்கு நான் இன்னும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

மற்றவர்கள் துன்பப்படாமல் இருக்க கடவுள் அவருக்கு அதிக நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும். வாழுங்கள் வாழ விடுங்கள். சீசன் 1 முதல் சீசன் 4 வரை நான் சேர்ந்து பணியாற்றியதில் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன். எல்லோருக்கும் நன்றி என்று எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார்.மணிமேகலையின் இந்த பதிவை தொடர்ந்து பிரியங்கா மீது பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக நேற்றய எபிசோடில் பிரியங்கா பேசிக்கொண்டு இருக்கும் போது மணிமேகலை கண் கலங்கி இருப்பது போல வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும், பிரியங்கா, தாமுவிடம் பிரியங்கா வாக்கு வாதம் செய்த வீடியோ ஒன்றில் தாமு, பிரியங்காவிடம் ‘இது ஸ்டார்ட் மியூசிக் இல்ல, CWC என்று சொல்லும் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது

Advertisement