தியேட்டரில் கொண்டாடிய Don படத்தை Netflixல் பார்த்ததும் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் – வைரலாகும் மீம்ஸ்.

0
925
don
- Advertisement -

Netflixல் டான் படத்தை பாத்து நெட்டிசன்கள் கேலி செய்து மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் புராடெக்ஷன் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, ராதாரவி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாஸ்கரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் கண்டிப்புடன் இருக்கும் தந்தையாக சமுத்திரக்கனி இருக்கிறார்.

இதையும் பாருங்க : ‘விஜய் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது’ – மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி அர்ஜுன் சம்பத் போலீசில் மனு.

- Advertisement -

டான் படத்தின் கதை:

இதனால் சிவகார்த்திகேயனை அதிகமாக திட்டுகிறார் சமுத்திரக்கனி. எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் முயற்சிக்கிறார். அப்போது கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் எஸ் ஜே சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் டிகிரி வாங்கினாரா? தன் தந்தையின் எண்ணத்தை முறியடித்தாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

டான் படம் பற்றிய தகவல்:

மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. படம் குறித்து பிரபலங்கள் பலரும் நல்ல நல்லவிமர்சனத்தை கொடுத்து இருந்தார்கள். இந்நிலையில் டான் படத்தை கிண்டல் கேலி செய்து நெட்டிசன்கள் போட்டு வரும் மீம்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது டான் படம் தற்போது Netflixல் வெளியாகி இருக்கிறது. படம் வெளியான போது பலரும் பாராட்டி நிலையில்

டான் படம் குறித்த மீம்ஸ்:

தற்போது நெட்பிளிக்ஸில் படத்தை பார்த்தவுடன் டான் படத்தை கேலி செய்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். தற்போது சோசியல் மீடியாவில் இது தான் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் ரவிக்குமார் தான் அயலான் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

சிவா நடிக்கும் படங்கள்:

ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுமட்டும் இல்லாமல் உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படம், தெலுங்கு,தமிழ் ஆகிய இரு மொழியில் உருவாகும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement