‘விஜய் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது’ – மதுரை ஆதீனத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி அர்ஜுன் சம்பத் போலீசில் மனு.

0
442
- Advertisement -

விஜய் குறித்து ஆவேசமாக அர்ஜுன் சம்பத் பேசி இருக்கும் கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். ‘பீஸ்ட்’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 மேலும், தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருந்தார். பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

- Advertisement -

தளபதி 66 படம் :

இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது.

விஜயை திட்டிய மதுரை ஆதீனம்:

இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து விஜய் அவர்கள் லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் மதுரையில் நடந்த மாநாட்டில் கலந்து இருந்த மதுரை ஆதினம், இந்துக்களை அவமதிக்கும் வகையிலான வசனங்களை திரைப்படங்களில் பேசி வரும் நடிகர் விஜய் திரைப்படங்களை பார்க்காதீர்கள் என்று கூறி இருந்தார். இப்படி இவர் பேசி இருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

-விளம்பரம்-

கொந்தளிப்பில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்:

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் தற்போது மதுரை ஆதீனத்திற்கு எதிராக விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்திருக்கின்றனர். அதிலும் நேற்று ஒட்டிய போஸ்டரில், மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை கொள்ளை அடிக்க திட்டம் போடுகிறீர்களேப்பா, நீங்கள் எல்லாம் தளபதியை பற்றி பேசலாமா தப்பா? வீண் விளம்பரத்திற்காக கோமாவில் எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்துங்கள். எங்களுக்கு ஜாதி மதம் ஏதுமில்லை. தளபதி மேல் மக்கள் கொண்டாடும் அன்புக்கு வானமே எல்லை என்ற வாசகங்களை அச்சடித்து ஒட்டி இருக்கின்றனர்.

அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டி:

இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு மதுரை மாநகர காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் இன்று மதுரை காவல் ஆணையரிடம் மனு அளித்திருக்கிறார். பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியிருப்பது, மதுரை ஆதினம் அரசியல்வாதிகளாலும், சினிமா ரசிகர்களாலும் அச்சுறுத்தப்படுகிறார். விஜய் ரசிகர்கள் ஆதினம் மீது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர். அம்மா, அப்பாவை விட விஜய் ஒன்றும் பெரிய ஆள் கிடையாது. விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூற வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement