இது பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்ல வாந்தியன் ஸ்டோர்ஸ் – கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

0
651
pandian
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது ஐஷ்வர்யா மற்றும் முல்லை கர்ப்பமாக இருக்கும் நிலையில் மீண்டும் ஒருவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் கர்ப்பமாக இருக்கு ப்ரோமைவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியல்ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என பழமொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதோடு தமிழில் கடந்த சில மாதங்களாகவே சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் தனியாக இருந்த முல்லையும், கதிரும் சமையல் போட்டியில் சிறப்பாக விளையாடி பத்து லட்சம் ரூபாய் பணத்தை வென்று தங்கள் வீட்டிற்கு வருகிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இதை அறிந்த மீனாவின் அப்பா கிண்டல் கேலி செய்கிறார். பின் மூர்த்தி குடும்பத்துக்கும் மீனாவின் அப்பா ஜனார்தனுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதனால் ஜனார்தன் மூர்த்தி குடும்பத்தை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். மனமுடைந்து மூர்த்தியின் மொத்த குடும்பமும் வீட்டை விட்டு வெளியே வருகிறது. பின் கதிர் தன்னுடைய வீட்டிற்கு மொத்த குடும்பத்தையும் கூட்டிக் கொண்டு செல்கிறார். வீட்டை கட்டும் வரை கதிர் வீட்டில் இருக்க முடிவு எடுக்கிறார்கள்.

சீரியலின் கதை:

மூர்த்தியின் குடும்பம் தாங்கள் புதிதாக வாங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான வேலையை ஆரம்பிக்கிறார்கள். தற்போது சீரியலில் மூர்த்தியின் குடும்பத்தை பழிவாங்க ஜனார்த்தன் திட்டம் போடுகிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை ஒழித்து கட்ட தன்னுடைய நண்பரிடம் ஜனார்த்தன் ஐடியா சொல்கிறார். இதைக்கேட்டு அவர்களும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் மீது புகார் அளிக்கிறார்கள். இந்த இடம் விவசாய நிலம். கடையை நடத்தக்கூடாது என்று அரசாங்கமும் கூறுகிறது. இதனால் என்ன செய்வது என்று புரியாமல் மூர்த்தியின் குடும்பமே அதிர்ச்சியில் இருக்கிறது.

-விளம்பரம்-

ப்ரோமோ :

இப்படி அடுத்து என்ன நடக்கும் என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தான் கண்ணனுக்கு தற்போது வங்கியில் வேலை கிடைத்துள்ளது இதனை வீட்டில் உள்ளவர்கள் கொண்டாடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க ஐஸ்வர்யா மற்றும் முல்லை இருவரும் கர்பமாக இருக்கின்றனர். இதனால் சீரியல் சில திருப்பங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் தான் தற்போது விஜய் டிவி பாண்டியன் ஸ்ட்ரோர்ஸ் பற்றி மீண்டும் ஒரு ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

அந்த ப்ரோமோவில் தனம் வாந்தி எடுக்கிறார், அதோடு நாள் தள்ளி போகிறது என்று கூறுகின்றனர். இதனால் தனம் மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதனை ப்ரோமோவாக வெளியுட்டுள்ளது விஜய் டிவி. இப்படிபட்ட நிலையில் தான் இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் “என்னடா இது? வாந்திக்கு வந்த சோதனை” என்று கலாய்த்து வருகின்றனர். மேலும் சில நெட்டிசன்கள் “என்ன கன்டென்ட் கிடைக்காமல் இப்படி ஒவ்வொருவரா கற்பமாக்குறீங்களா? இது பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்ல வந்தியன் ஸ்டோர்ஸ் என்று கலாய்த்து வருகின்றனர்.

Advertisement