சர்கார் படம் வெளியாக இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் சமீபத்தில் உதவி இயக்குனர் வருண் என்பவர் சர்க்கார் படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், செங்கோல்’ என்று பெயரில் ஒரு கதையை ஏற்கனவே எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும். அந்த கதையை திருடித்தான் ஏ ஆர் முருகதாஸ் சர்கார் படத்தை உருவாக்கி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

Advertisement

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிலையில் நடிகர் விஜய்யின் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது தீர்ப்பு வழங்கியதால் விஜய் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.இதையடுத்து நேற்று சென்சர் போர்டு படத்திற்கு ‘U/A’ சான்றிதழை வழங்கிய தகவலையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால், எழுத்தாளர்கள் சங்கத்தில் இயக்குனர் வருண் அளித்த புகாரின் அடிப்படையில் எழுத்தாளர் சங்கம் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் பஞ்சாயத்து பேசியுள்ளது. இதில் பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜும் பஞ்சாயத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்த பிரச்சனை குறித்து முருகதாசுடம் பேசியுள்ள பாக்கியராஜ், இது உண்மையில் திருடப்பட்டதுதான் தான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்.

Advertisement

அதே போல எழுத்தாளர் சங்க தலைவரான பாக்யராஜும், சர்கார் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் இயக்குனர் முருகதாஸுடன் பேச்சு வார்த்தை நடித்தியுள்ளார் ஆனால், அவரோ நீதி மன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். சர்கார் படம் வெளியாக இன்னும் 10 நாட்காளே உள்ள நிலையில் தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தாள் அது படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படுத்தி விடும் என்றும் படகுழுவினர் கவலையில் உள்ளனர்.

Advertisement
Advertisement