‘கலர் to காக்கி சட்டை’ நியூஸ் ரீடர் போலீஸ் ஆனது எப்படி ? பின்னணி இது தான்

0
564
News
- Advertisement -

செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது காவல் துறையில் அதிகாரியாக இருக்கும் மோகன்ராஜ் உடைய பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சன் டிவியில் நியூஸ் ரீடராக பணிபுரிந்தவர் மோகன்ராஜ். இவர் சன் டிவியில் மட்டுமில்லாமல் ஜெயா டிவி, பாலிமர், ராஜ் டிவி என பிற மொழி சேனல்களிலும் நியூஸ் ரீடராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும், இவர் நியூ சீடராக மட்டும் இல்லாமல் ஆங்கர் ஆகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர் தமிழ்நாடு காவல் துறையில் போக்குவரத்து வார்டனாக இருக்கிறார். இந்நிலையில் இது தொடர்பாக பிரபல சேனல் இவரிடம் பேட்டி ஒன்று எடுத்திருக்கிறது. அதில் அவர் கூறியிருந்தது, நான் ஆங்கர், நியூ ரீடராக பல வருடங்களாக பணியாற்றி வருகிறேன். சன் டிவியில் 5 வருடம், ஜெயா டிவியில் 20 வருடம் என பல சேனல்களில் பயணித்திருக்கிறேன். எனக்கு போலீஸ் ஆகுவது என்பது ஒரு பெரிய கனவு. இதற்காக நான் என் உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தேன்.

- Advertisement -

மோகன்ராஜ் அளித்த பேட்டி:

TPTW வேலைக்காக மூன்று வருடத்திற்கு முன்னாடியே அப்ளை செய்திருந்தேன். ஆனால், கொரோனா காலகட்டத்தினால் அந்த வேலை தள்ளி போய்க்கொண்டு சென்றது. சமீபத்தில் தான் இந்த வேலைக்கான ஆட்கள் எடுக்கப்பட்டது. இது 15 நாட்கள் ட்ரைனிங் மட்டும்தான். இந்த வேலையை பற்றி சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய தமிழ்நாடு விபத்தில் முதலிடத்தில் இருக்கிறது. இது மிகவும் கொடுமையான விஷயம். கோடிக்கணக்கான மக்கள் வாழுகின்ற இடத்தில் 3000 போலீஸ் இருப்பது கஷ்டமான ஒன்றுதான்.

TPTW குறித்த தகவல்:

அதற்காக போலீசுக்கு உறுதுணையாக பல அமைப்புகள் இருந்தாலும் அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கவில்லை. இதனால் எங்களுடைய தமிழ்நாடு போலீஸ் டிராபிக் வார்டனுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். நாங்களும் சாலையில் போலீஸ் உடன் இணைந்து பணியாற்றலாம். அவர்களுக்கு நிகராக எங்களுக்கும் அதிகாரமும் உரிமையும் கொடுத்திருக்கிறார்கள். இது போக்குவரத்து துறையில் மட்டும் இல்லாமல் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்யலாம்.

-விளம்பரம்-

வேலை குறித்த தகவல்:

இது சம்பளத்திற்காக செய்யும் வேலை இல்லை. ஒரு சமூக அக்கறையுடன் செய்யப்படும் வேலை. இது நாள் முழுவதும், வருட கணக்கில் செய்யப்படும் வேலை இல்லை. ஒரு குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நேரத்தில் செய்யலாம்.இந்த வேலை கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்று வேலை குறித்த பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement