இன்று செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்.! நேர்பட பார்வைக்கு போட்டியா.!

0
694
Ngk
- Advertisement -

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் இயக்குனர் செல்வராகவன் தனக்கென்ற ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளார். இவர் இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தின் நடிகர் சூர்யா “என்ஜிகே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு இந்த இந்த படத்தின் ஆரம்ப தகவல்கள் வெளியாகின. 

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ட்ரீம் வாரிர்ஸ் பிக்சர் இந்த படத்தை தயாரித்துள்ளது. நீண்ட நாட்களாக மந்தமாக இருந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படம் ஒரு அரசியல் சார்ந்த படமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் இன்று(மார்ச் 5) செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது ரசிங்கர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. நேற்று இரவு தான் அஜித்தின் நேர்பட பார்வையின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement