சூர்யா படத்திற்கு வந்த சிக்கல்..! வருத்தத்தில் ரசிகர்கள்..

0
889
Surya-Actor

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா “என்ஜிகே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே இந்த இந்த படத்தின் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ngk1
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், ட்ரீம் வாரிர்ஸ் பிக்சர் இந்த படத்தை தயாரித்துள்ளது. இடையில் இந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன் உடல் நல குறைவால் பாதிக்கபட்டிருந்ததால் படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தபட்டிருந்தன. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகளை மீண்டும் துவங்கினர்.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும் பெற்றிருந்தது. வரும் தீபாவளி அன்று இந்த படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்த்து வந்த நிலையில், தற்போது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ngk
இந்த படத்தை தயாரித்து வரும் , ட்ரீம் வாரிர்ஸ் பிக்சர், இந்த படம் திட்டமிட்டபடி தீபாவளி அன்று வெளியாவது சந்தேகம் தான் என்று திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. இருப்பினும் முடிந்த அளவிற்கு தீபாவளிக்குள் இந்த படத்தை வெளியிட முயற்சிப்போம் என்று தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement