-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

போதை மருந்துகளுடன் உல்லாசப் பார்ட்டி – நடிகரின் மகள், எம்.பி மகன், காவல்துறை அதிகாரியின் மகள் உள்பட 125 பேர் கைது.

0
753

போதை பார்ட்டியில் ஈடுபட்டதாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்ப நடிகை கைதாகியுள்ள சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிரஞ்சீவி. ‘மெகா ஸ்டார்’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சிரஞ்சீவி. இவர் தெலுங்கில் ‘பிராணம் கரீடு’ என்ற படத்தின் மூலம் தான் நடிகரானார். இந்த படத்தை இயக்குநர் கே.வாசு இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் சிரஞ்சீவி நடித்திருக்கிறார். சிரஞ்சீவியின் 150-வது படம் 2017-ஆம் ஆண்டு டோலிவுட்டில் ரிலீஸானது. ‘கைதி நம்பர் 150’ என டைட்டில் சூட்டப்பட்டிருந்த அந்த படத்தை பிரபல இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

இப்படம் ‘தளபதி’ விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காம். இதனை தொடர்ந்து இவர் சைரா நரசிம்மா ரெட்டி என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும், பாகுபலி படத்திற்கு அடுத்து பிரம்மாண்டமான அளவிலும், அதிக பட்ச செலவிலும் “சைரா நரசிம்ம ரெட்டி ” படம் வந்தது. இந்தப்படம் சுதந்திரப் போராட்டத்திற்கு முக்கிய காரணமான நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கையை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.

இதையும் பாருங்க : ஊர்ல கிடா விருந்துல என்ன உள்ளேயே விடல, பீடை கதாபாத்திரத்தால் ஏற்பட்ட அனுபவம் குறித்து பாலா சரவணன் சொன்ன சுவாரசிய தகவல்.

ஆச்சார்யா படம் பற்றிய தகவல்:

இந்த படத்தில் சிரஞ்சீவி, சுதீப், நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளார்கள். இதனைத் தொடர்ந்து ‘ஆச்சார்யா’ என்ற புதிய படத்தில் சிரஞ்சீவி நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை கொரட்டால சிவா இயக்கி கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சிவா சரண் தேஜா, காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, சோனு காஜல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படம் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது நடிகர் சிரஞ்சீவி அவர்கள் காட்பாதர் என்ற படத்தில் நடித்து வருகிறார். லூசிபெர் என்ற மலையாள படத்தை மையமாக வைத்து காட்பாதர் படம் எடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.

சிரஞ்சீவி குடும்ப நடிகை கைது:

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சல்மான்கான் இந்த படத்தில் 20 நிமிட காட்சிகளில் நடித்து இருக்கிறார். இப்படி தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்திவரும் சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து ஹீரோயினியாக இருக்கும் நடிகை நிஹாரிகா தற்போது போதை பார்ட்டியில் கைதாகியுள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சிரஞ்சீவியின் மூத்த தம்பி நாக பாபுவின் மகள் தான் நிஹாரிகா. இவர் ஹீரோயினாக சில படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் நிஹாரிகா கதாநாயகியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

நடிகை நிஹாரிகா பற்றிய தகவல்:

இந்த படம் பெரிய அளவில் நிஹாரிகாவுக்கு கை கொடுக்கவில்லை என்பதால் தமிழில் வேறு எந்த படங்களிலும் இவர் நடிக்கவில்லை. பின் இவர் தெலுங்கு மொழியில் மட்டும் சில படங்களில் நடித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் இருக்கும் பப்பில் போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். அப்போது போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அங்கு இருந்த எல்லோரையும் போலீசார் கைது செய்தனர். அதில் நிஹாரிகா, அவருடைய நண்பர்களும் இருந்தார்கள். இதையடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.

நடிகை நிஹாரிகா கைதாக காரணம்:

அதன்பின் நிஹாரிகாவை விடுவித்து இருக்கின்றனர். மேலும், தற்போது முதல்கட்ட விசாரணை நடந்து வருகிறது என்பதால் போதைப்பொருள் நிஹாரிகா பயன்படுத்தினாரா? போலீசார் அவரை விடுவிக்க காரணம் என்ன? நிஹாரிகா மீது எந்த தவறும் இல்லையா? என்று பல கேள்விகளுக்கு பதில் இனிமேல் தான் தெரியவரும் என்று கூறப்படுகிறது. இதேபோல்தான் கடந்த ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் மகன் ஆரிய கான் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்து இருந்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. தற்போது சிரஞ்சீவி குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டிருப்பது தென்னிந்திய சினிமாவுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news