ஊர்ல கிடா விருந்துல என்ன உள்ளேயே விடல, பீடை கதாபாத்திரத்தால் ஏற்பட்ட அனுபவம் குறித்து பாலா சரவணன் சொன்ன சுவாரசிய தகவல்.

0
549
Balasaravanan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக திகழ்பவர் பாலசரவணன். ஆரம்பத்தில் இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் பங்கு பெற்றிருந்தார். அதற்கு பின் இவர் வெள்ளித்திரையில் சென்று பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் முதன் முதலாக 2013 ஆம் ஆண்டு வெளிவந்த குட்டிபுலி என்ற படத்தின் மூலம் தான் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஈகோ, திருடன் போலீஸ், டார்லிங், வலியவன், வேதாளம், கூட்டத்தில் ஒருவன் போன்ற பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் டான் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனும் ஒன்றாக இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பாலசரவணன் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ரீலிசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றன.

- Advertisement -

பண்ணையாரும் பத்மினியும் பட அனுபவத்தை பகிர்ந்த பால சரவணன்:

இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் பாலசரவணன் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் தான் நடித்த பீடா கதாபாத்திரம் குறித்து கூறியிருப்பது, பண்ணையாரும் பத்மினியும் படத்தில் பீடா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கணும் என்று சொன்னார்கள். அப்போது அருண்குமார், நீ பீடா கதாபாத்திரத்தி ஏற்றவாறு இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். அப்போதெல்லாம் தனியா மேக்கப் மேன் யாரும் கிடையாது.

55 நாட்கள் குளிக்காமல் இருந்த காரணம்:

நம்மளை நாமே தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்காக நான் 55 நாட்கள் தலைக்கு குளிக்காமல் முடியை ஜடை பின்னும் மாதிரி கொண்டு வந்தேன். அதற்கு பிறகு நான் அணிந்த ஆடைகள் எல்லாம் சகதியில் புரட்டிப்போட்டு விஜய், அருண் எல்லோரும் கொண்டு வந்தார்கள். அப்படியே என்னை பீடா கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாற்றி விட்டார்கள். அழகர்கோவில் பக்கத்தில் உள்ள கிராமத்தில் ஒரு 55 நாள்களுக்கு மேல் சூட்டிங் நடந்தது. அப்போது அந்த ஊரில் கிடா வெட்டு திருவிழா நடந்தது. அங்கிருந்த ஊர்மக்கள் படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் கிடாவெட்டு விருந்தில் கலந்து கொள்ள சொன்னார்கள்.

-விளம்பரம்-

ஊர் திருவிழாவில் நடந்தது:

அந்த அளவிற்கு ஊர்மக்கள் பாசக்காரர்கள். என்னுடைய ஷாட் நடந்து கொண்டிருந்தால் எல்லோருமே முன்னாடி போயிட்டாங்க. நான் என்னுடைய சாட் முடித்துவிட்டு மூஞ்சி எல்லாம் கழுவி கொண்டு உள்ளே சாப்பிட போனேன். அப்போ அங்கிருந்த ஒருவர், தம்பி நீ எங்க போற? நில்லு என்று தடுத்து நிறுத்தினார். நானும் இவங்களோட வந்தவர் தான் நடிக்கிறேன், சாப்பிட போறேன் என்று சொன்னேன். இல்ல, நீ அங்க போகாதிங்க, ஓரமா உட்காரன்னு சொல்லி ஒரு இடத்தை காண்பித்தார். அந்த இடத்தில் ஏற்கனவே இரண்டு பிச்சைக்காரர்கள் உட்கார்ந்து சாப்பிட்டு இருந்தார்கள். என்ன சொல்றதுன்னு தெரியல? நம்ம நிலைமை இப்படி ஆயிடுச்சே என்று நினைத்தேன்.

படகுழுவினர் வந்து பிறகு நடந்தது:

பின் சேதுபதி,அருனுக்கு போன் பண்ணி கூப்பிட்டேன். அவர்கள் உள்ள வாடா, என்று சொல்கிறார்கள். நானும் என்னை உள்ளே விடமாட்டார்கள் வந்து என்னை கூட்டிக் கொண்டு போங்கள் என்று சொன்னேன். பின் அவர்கள் வந்து ஐயா இவரும் இந்த படத்தில் நடிப்பவர் தான் விடுங்கள் என்று சொன்னதற்கு பிறகு தான் அவர் விட்டார். நான் குட்டிபுலி படத்தில் நடித்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆமாம், நீ குட்டிப்புலி படத்தில் நடித்த தம்பி தானே! இதை முதலிலேயே சொல்ல கூடாதா, மூஞ்சி கழுவி கொண்டு வந்து இருக்கலாம் என்று சொன்னார். மூஞ்சியை கழுவியே நான் அந்த கோலத்தில் இருந்தேன். அந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது என்று கூறி இருந்தார்.

Advertisement