நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் இருந்து விலகிய நிஷா..! என்ன காரணம் தெரியுமா ?

0
14450

சின்னத்திரை சீரியல் நடிகை நிஷா பிரபல சீரியலில் இருந்து விலகப்போவதாக தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா .விஜய் டிவி யில் ஒளிபரப்பான கனா கானும் காலங்கள் என்ற சீரியலில் அறிமுகமானர். பின்னர் பல டீவி நிகழ்ச்சிகளில் தொகுபலினியாகவும் இருந்து வந்தார்.

nisha

சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மரப்பதில்லை என்ற நாடகத்தில் அமிதுக்கு மனைவியாக நடித்து வந்தார் நிஷா. அந்த நாடகத்தில் காவல் அதிகாரி ஒருவரை விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்டு வாழும் சத்யா என்ற பெண்ணாக நடித்து வந்தார்.ஆனால் இனிமேல் அந்த சீரியலில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்து விட்டார் நிஷா.

இதுபற்றி கூறிய நிஷா எனக்கு சத்யா என்ற கதாபத்திரம் தமக்கு மிகவும் சவலாக இருந்தது .இது போன்ற கதாபாத்திரத்தில் நான் நடித்ததே இல்லை, ஆனால் சத்யா என்ற கதாபாத்திரம் மற்ற சீரியல்களில் வெளிவர தொடங்கியது. இதனால் நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் குழுவினர் சத்யா கதா பாத்திரத்தை ஸ்வாரஸ்யமாக மாற்ற எவ்வளவோ முயற்சித்தனர். இருப்பினும் நான் சில மாதங்களாக எந்த ஒரு முன்னேற்றத்தயும் பார்க்க முடியவில்லை, அதனால் நான் நெஞ்சம் மரப்பதில்லை சீரியலில் இருந்து வெளியேறிவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.