மதன் கௌரி யூடுடுயூப் சேனலுக்கு நித்யானந்தா வைத்த செக் – வருத்தத்தில் மதன் கௌரி வெளியிட்ட வீடியோ.

0
347
- Advertisement -

தன்னுடைய youtube சேனலுக்கு நித்தியானந்தா காப்பிரைட் கொடுத்திருக்கிறார் என்று மதன் கௌரி பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே யூடியூப் என்பது பலருக்கு பொழுது போக்கு தளமாக இருந்தாலும் சில பேருக்கு வருமானம் ஈட்டும் தளமாக அமைந்து வருகிறது. யூட்யூப் மூலம் வீடியோக்களை வெளியிட்டு பல பேர் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் மூலம் பிரபலமானவர் தான் மதன் கௌரி.

-விளம்பரம்-

இவர் முதலில் மென்பொறியாளராக தான் வேலை செய்து கொண்டிருந்தார். பின் அந்த வேலையை விட்டு முழு நேரமாக youtube சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவர் யாரும் அறியாத பல சுவாரசியமான தகவலை வீடியோவாக வெளியிட்டு வருவதன் மூலமாகவே மக்கள் மத்தியில் சீக்கிரமாகவே பிரபலமாகிவிட்டார் என்று சொல்லலாம். அதிலும் வெளிநாடுகளில் நடக்கும் சில நிகழ்வுகளை நமக்கு புரியும் வகையில் எளிதாக தமிழில் இவர் சொல்கிறார்.

- Advertisement -

மதனின் யூடியூப் சேனல்:

அது மட்டுமில்லாமல் இந்தியாவில் நிலவும் பல சமூகப் பிரச்சினைகளையும் இவர் முன் வைக்கிறார். மேலும், மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு அதன்படி வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் தான் இவர் அசால்டாக பிரபலமானார் என்று கூடச் சொல்லலாம். தற்போது இவர் ஒரு மாதத்திற்கு இலட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மதன் கவரி தன் டுவிட்டரில் பிரபல கார் கம்பெனி அதிபர் எலான் மஸ்க் அவர்களை டேக் செய்து இந்தியாவில் மின்சார வாகனங்கள் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மதன் குறித்த தகவல்:

அந்த ட்வீட்டுக்கு சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் எலான் மஸ்க் பதில் அளித்திருந்தார். அதில் அவர், இந்தியாவில் அதிக இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதனால் மின்சார வாகனம் இறக்குமதி சற்று தாமதம் ஆகிறது என்று பதில் அளித்து இருந்தார். இப்படி தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு உலகமே வியந்து பார்க்கும் ஒரு சிஇஓ ட்விட்டரில் பதிலளித்தது வியப்பை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மதன் சோஷியல் மீடியாவில் பிரபலமாக இருக்கிறார். அதோடு மதனுக்கு சோசியல் மீடியாவில் பாலோஸ் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

-விளம்பரம்-

மதன் யூடியூப் சேனல் ஆபத்தான நிலை:

இந்த நிலையில் திடீரென்று மதன் கௌரி அவர்கள் தன்னுடைய யூடியூப் சேனல் ஆபத்தான நிலையில் இருக்கிறது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, திடீரென்று மதன் கௌரிக்கு ஒரு மெயில் வந்திருக்கிறது. அது நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து ஒருவர் மெயில் அனுப்பி இருக்கிறார். மதன் மும்பை சென்றபோது நித்தியானந்தாவின் ஒரு விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதை வீடியோவாக எடுத்து தன்னுடைய வீடியோவில் ஒரு இடத்தில் மதன் பயன்படுத்தியிருந்தார். அதிலும் தலைவன் எல்லா இடத்திலும் இருக்கிறார். ஃபேன் இந்தியா தலைவன் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.

வழக்கு தொடரும் மதன்:

அந்த வீடியோவில் எந்த ஒரு தவறான தகவலையும் மதன் கௌரி போடவில்லை. இருந்தாலும், நித்யானந்தா வீடியோக்களை காப்பியடித்து தான் இதை மதன் செய்திருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். மேலும், நித்தியானந்தா அவர்களின் கண்டன்ட்டை காப்பியடித்து இந்த வீடியோவை வெளியிட்டதாக மதன் கௌரி யூடியூப் சேனலை முடக்க நினைக்கிறார்கள். இதனால் மதன் கௌரி தற்போது youtube இடம் அப்பில் செய்திருக்கிறார். இது தொடர்பாக கோர்ட்டுக்கு சென்று வழக்கு தொடங்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். தற்போது இவர் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement