வீட்டிற்குள் புகுந்த மழை, துண்டிக்கப்பட்ட கரண்ட் – தந்தையுடன் அவதிப்பட்டுள்ள ஜெயம் ரவி பட இயக்குனர். வீடியோ இதோ.

0
414
jayam

கடந்த சில தினங்களாக நிவர் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் புயல் ஏற்பட்டது. இந்த புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உட்பட பல்வேறு நகரங்கள் தண்ணீரில் மூழ்கிய.து அதிலும் குறிப்பாக சென்னையில் எடுத்துக்கொண்டால் மடிப்பாக்கம், புழுதிவாக்கம் புளியந்தோப்பு, கேகே நகர் போன்ற பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மழை நீர் புகுந்ததால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதே போல பல்வேறு வீடுகளில் மழை நீர் புகுந்ததால் அதில் வசித்த மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். சென்னை மாநகராட்சி அளித்த தகவலின்படி இதுவரை 300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்து கொண்டு இருக்கிறதாம் அதில் 135 புகார்கள் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மழையின் தாக்கம் குறைந்தாலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தை இயக்கிய இயக்குனர் பிரதீப் ரங்கனதன் வீட்டில் மழை நீர் புகுந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் மழை நீர் புகுந்துள்ளது மேலும் அவர் வசிக்கும் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தனது தந்தையுடன் சேர்ந்து இருட்டில் வீட்டின் சாவியை தேடி இருக்கிறார் பின்னர் அதனை கண்டுபிடித்து வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார் இந்த காட்சிகள் அவர் வெளியிட்ட வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

இப்படி ஒரு நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். டிச. 1 முதல் 3 வரை மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement