Kgf2வில் இதுனால தான் பேசல, ரசிகர்களுக்காக Kgf2 வசனத்தை பேசி அசத்திய நிகழ்கள் ரவி. வீடியோ இதோ.

0
953
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் நிழல்கள் ரவி. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், பெரும்பாலும் இவர் தமிழ் மொழி படங்களில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1980 ஆம் ஆண்டில் தான் இவர் தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மேலும், நிழல்கள் ரவி அவர்கள் படங்களில் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி 2 சீரியல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். பெரும்பாலும் இவர் நடிகராக தான் பலருக்கும் தெரியும். ஆனால், இவர் பல நடிகர்களுக்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆவார். இவருடைய நடிப்பிற்க்கு ஏற்றவாறு குரலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

- Advertisement -

கே.ஜி.எஃப் படத்தில் நிழல்கள் ரவி:

அந்த வகையில் கேஜிஎஃப் படத்திற்கு ரவி குரல் கொடுத்திருக்கிறார். கன்னட சினிமா துறையின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் யாஷ் நடிப்பில் வெளியான படம் தான் கே.ஜி.எஃப். இது ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இந்த படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்தது. மேலும், இந்த படத்தில் ஆரம்பத்தில் கதை சொல்லும் நடிகர் ஆனந்த் நாக் அவர்களுக்கு குரல் கொடுத்தது நிழல்கள் ரவி தான். இந்த குரல் மூலம் நிழல்கள் ரவிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது.

கே ஜி எஃப் 2 படம் ரிலீஸ்:

இதனை தொடர்ந்து தற்போது கே ஜி எஃப் 2 படம் உருவாகியுள்ளது. பீஸ்ட் படம் வெளியாகி ஒரு நாள் இடைவெளியில் அடுத்த நாள் கேஜிஎப் 2 படம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சமீபத்தில் தான் கே ஜி எஃப் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஆனால், கே ஜி எஃப் 2 படத்தின் டிரெய்லரில் நிழல்கள் ரவி குரல் இல்லை என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி ஆகி விட்டார்கள். பிறகு இது குறித்து பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் நிழல்கள் ரவி அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

-விளம்பரம்-

கேஜிஎப் 2 படம் குறித்து நிழல்கள் ரவி அளித்த பேட்டி:

அதில் அவர் கூறியிருப்பது, கேஜிஎஃப் படத்தில் நடிகர் ஆனந்த் நாக் குரல் கொடுத்திருந்தேன். இந்த படத்தின் மூலம் எனக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. என் குரலுக்கு ரசிகர்கள் இப்படி கொண்டவர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தில் நான் ஒரு மூன்று, நான்கு நாட்கள் வேலை செய்து இருப்பேன். பின் நான் என்னுடைய அடுத்த வேலையை பார்க்க போயிட்டேன். படம் வெளியே வந்த பிறகு பலரும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் உங்கள் குரல் வேற லெவல் சூப்பராக இருக்கிறது என்று பாராட்டும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அதற்கு பிறகு கே ஜி எஃப் 2 படத்திற்கு இயக்குனர் என்னை அணுகவில்லை.

கேஜிஎப் 2 படத்தில் குரல் கொடுக்காத காரணம்:

மேலும், ட்ரைலர் வந்த உடனே ரசிகர்கள் பலரும் கால் செய்து, நீங்கள் ஏன் கேஜிஎப் 2 படத்தில் குரல் கொடுக்கவில்லை. என்ன ஆச்சு? ஏன்? என்று கேட்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நம்முடைய குரலுக்காக ரசிகர்கள் இவ்வளவு வருத்தப்படுகிறார்கள் என்று நினைத்தேன். சொல்லப்போனால் அந்த படத்தில் ஆனந்த் நாக் பதில் என்னுடைய நண்பர் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். அவருடைய குரலும் சூப்பராக இருக்கும். பட்டத்தில் அவருடைய குரலில் பேசி இருக்கிறார் என்று கூறுகிறார். இப்படி நிழல்கள் ரவி அளித்துள்ள பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement