புதிய கேபிள் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.! அடுத்த மாதம் முதல் கட்டணம் இவ்வளவா.!

0
369
Trai

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கட்டண விகிதங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் டிராய்க்கு உள்ளது என்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். அந்த உத்தரவின் பேரில் நாளை ( பிப்ரவரி 1ம் தேதி) முதல் டிடிஹெச் மற்றும் கேபிள் மாதாந்திர கட்டணம் மாறுதல் ஏற்படுகின்றது. இதில் 100 சேனல்கள் இலவசமாக கிடைக்கின்றது.

இந்த புதிய திட்டத்தின்படி, ஜிஎஸ்டி சேர்த்து 153 ரூபாய் கட்டணத்தில் 100 இலவச சேனல்கள் வழங்கப்படும். 100க்கு மேற்பட்ட இலவச சேனல்கள் வேண்டும் என்றால், ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் கூடுதலாக 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இது தவிர கட்டண சேனல்கள் தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும். ஜனவரி 31 ஆம் தேதியான வியாழக்கிழமைக்குள் வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய சேனல்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே டிராய் அறிவித்திருந்தது. அதன்படி, டிடிஹெச் மற்றும் கேபிள் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் சேனல்களை தேர்வு செய்யுமாறு கூறி வருகின்றன.

இந்த புதிய விதிமுறையால் தற்போது இருப்பதை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என ஒரு தரப்பினரும், கட்டணம் குறையும் என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், புதிய கட்டண விதிமுறை அமல்படுத்தப்படுகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா திட்டவட்டமாக