இனி சமந்தாவுக்கு டப்பிங் செய்ய முடியாது – சின்மயின் அதிரடி அறிவிப்பு. இதான் காரணமாம்.

0
365
chinmayi
- Advertisement -

இனி சமந்தாவுக்கு டப்பிங் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சின்மயி கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும், வைரமுத்துவுக்கும் இடையே பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும், எதிர்ப்புகளும் கிளம்பியது. இது ஒரு பக்கம் இருக்க, சின்மயி அவர்கள் பாடகி என்பதை தாண்டி இவர் பின்னணி குரல் கொடுப்பவரும் ஆவார்.

- Advertisement -

சின்மயி பின்ணணி குரல் கொடுத்த நடிகைகள்:

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, திரிஷா போன்ற பல நடிகைகளுக்கு சின்மயி பின்னணி குரல் கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் சின்மயி அவர்கள் இனி சமந்தாவிற்கு டப்பிங் கொடுக்க முடியாது என்று கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, தற்போது சமந்தா அவர்களே தெலுங்கில் சொந்தமாக தானே டப்பிங் செய்து வருகிறார்.

சமந்தா குறித்து சின்மயி சொன்னது:

இதனால் சமந்தாவிற்கு டப்பிங் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையாம். இது குறித்து சின்மயி அவர்கள் கூறியிருப்பது, தெலுங்கு சினிமாவில் டப்பிங் கலைஞராக என்னுடைய பயணம் முடியும் காலம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன். என்னுடைய மிகச்சிறந்த தோழியான சமந்தா தன்னுடைய படங்களுக்கு அவரே டப்பிங் பேசி வருகிறார். இனி அவருக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு எனக்கு கிடையாது என்று கூறியிருக்கிறார். இப்படி சின்மயி கூறி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

சமந்தா திரைப்பயணம்:

கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா என்ற படத்தில் ஊ சொல்லிறியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார்.

சமந்தா நடிக்கும் படங்கள்:

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி இருந்த காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் சமந்தா அவர்கள் திரில்லர் கதை களம் கொண்ட படம், யசோதா, குஷி, சாகுந்தலம், ஹாலிவுட் படம் போன்று பல படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

Advertisement