அங்காடி தெரு படத்தில் நடித்த இந்த பெண் தான் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்ததாம் – வசந்தபாலன் சொன்ன சீக்ரெட்.

0
781
Angaadi Theru
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அங்காடித்தெரு. இந்த படத்தில் மகேஷ், அஞ்சலி, இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை கருணாமூர்த்தி, அருண்பாண்டியன் அவர்கள் இணைந்து தயாரித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி, ஜீவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சென்னையில் உள்ள பிரபல கடையில் பணிபுரியும் வறுமையான கிராமத்து இளைஞர்கள் படும் கஷ்டத்தை தோலுரித்து காட்டியது இந்த படம்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-48.jpg

சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள பிரமாண்ட வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட கதை. இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிளேயே எடுக்கப்பட்டது. இந்த படத்தை இயக்கிய வசந்த பாலன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து உள்ளார். ஆல்பம், வெயில் அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் உட்பட பல படங்களை இயக்கி உள்ளார்.

இதையும் பாருங்க : ‘வெறுப்பேத்தாத டா’ கலாய்த்த தனது அண்ணன் செல்வராகவன், தனுஷ் போட்ட ட்வீட் இப்போ வைரல்.

- Advertisement -

கடந்த ஆண்டு இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அந்த பேட்டியில், வசந்தபாலன் அங்காடி தெரு படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை கூறி இருந்தார். அது என்னவெனில் இந்த படத்தில் அஞ்சலிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது. இதே படத்தில் நடித்த வேறு ஒரு நடிகை தானாம். இதுகுறித்து கூறி இருந்த வசந்த பாலன் : –

This image has an empty alt attribute; its file name is 2-15.jpg

இந்தப்படத்தில் மாடியிலிருந்து கீழே விழுந்து இறக்கும் பெண்ணைத்தான் இந்த கதையில் முதலில் கதாநாயகியாக நடிக்க வேண்டி இருந்தது. ஆனால், படம் ரொம்ப ராவா இருக்கும் என்பதால் ஒரு சின்ன ரொமான்ஸ் வைக்கலாம்னு திட்டம் செய்து. பின்னர் சினிமா தெரிந்த பெண்ணாக இருந்தால் ரொமான்ஸ் வொர்க் அவுட் ஆகும் என்று நினைத்தோம்.நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருந்த அந்தப் பெண் வசனம் நடிப்பு என்று எல்லாம் சரியா செய்து விடுவார்கள் என்று நம்பிக்கை இருந்தது. ஆனால் ரொமான்ஸ் போர்ஷன் நடிக்க கூச்சப்பபட்டுவிட்டாள் என்றால் சரியாக இருக்காது என்று யோசனை வந்தது அப்போது கற்றது தமிழ் பார்த்துவிட்டு அஞ்சலியை ஹீரோயினாக நடிக்க செய்தோம் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement