என் டி ஆருக்கு அவரது மகன்கள் ஒருவேளை உணவு கூட போடவில்லை.! ஷாக்கிங் தகவலை வெளியிட்ட நபர்.!

0
435
Ntr

தமிழில் எம் ஜி ஆர், சிவாஜி காலகட்டத்தில் தெலுங்கில் கலக்கி கொண்டிருந்தவர் தெலுங்கு நடிகர் என் டி ஆர். நாம் தமிழில் பார்த்த பல்வேறு பக்தி படங்களில் இவர் இல்லாமல் இருந்தது இல்லை. அப்படிப்பட்ட இவர் வாழ்க்கை வரலாறு படமாக சமீபத்தில் வெளியானது.

க்ரிஷ் இயக்கத்தில் இந்த படத்தில் என் டி ஆராக,
அவரின் மகன் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த படத்தில் என் டி ஆரின் வாழ்க்கை மேம்போக்காக மட்டும் கட்டப்பட்டுள்ளது என்றும்,
இதில் கொஞ்சம கூட ஒரிஜினாலிட்டி கிடையாது. அவர் பட்ட கஷ்டங்கள் எதையுமே சொல்லவில்லை மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர், என்.டி.ஆர் தன் மகன்கள், மகள்கள் மேல் மிகுந்த பாசம் கொண்டவர். அவர்களை பற்றியே எப்போதும் நினைப்பவர். ஆனால், அவரின் மனைவி பசவதாரகம் இறந்த பிறகு அவரை கவனிக்காமல் கைவிட்டுவிட்டார்கள். அவருக்கு இட்லி என்றால் ரொம்ப பிடிக்கும். ஒருவேளை சாப்பாடு கூட பிள்ளைகளால் அவருக்கு தரமுடியவில்லை.

அவரது சொத்துக்களை மட்டும் அவர்கள் பங்குபோட்டுக்கொண்டனர். பாலகிருஷ்ணா மட்டும் அவரின் சினிமா வாரிசாக இருக்கிறார். என்.டி,ஆரின் மற்ற மகன்கள் அவரின் புகழை காப்பாற்றவில்லை. அவரின் சொத்துக்களை காப்பாற்றாமல் விற்றுவிட்டனர். இதையெல்லாம் ஏன் படத்தில் காண்பிக்கவில்லை.

-விளம்பரம்-

என்.டி.ஆர் மகா நடிகர். அவரின் நடிப்பிற்கு ஏன் சந்திரபாபு நாயுடு பாரத ரத்னா விருது பெற்று தர முயற்சிக்கவில்லை. ஒன்று மட்டும் நிஜம் பாலகிருஷ்ணா இந்த படத்தை எடுத்து என் டி ஆருக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார் என்று கூறியுள்ளார்.

Advertisement