NTRன் மகள், பாலைய்யாவின் சகோதரி தற்கொலை – கோடிக்கணக்கில் பணம் இருந்தும் நிம்மதி இல்லாமல் போன வாழ்கை. போலீசார் விசாரணை.

0
445
balakrishna
- Advertisement -

என்.டி.ராமாராவ் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். 1923-ஆம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி ஆந்திர மாநிலத்தில் நிம்மகுரு என்ற ஊரில் பிறந்தார். சிறு வயதில் இருந்தே சினிமா ஆர்வம் கொண்டவராக இருந்த என்.டி.ராமாராவ் , எம்.ஜி.ஆரை போலத்தான் 1947-ல் மனதேசம் எனும் தெலுங்கு படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் நடித்தார். அதன் பிறகு பை-லிங்குவல் படமாக வெளியான பாதாள பைரவி’ படத்தின் மூலம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபலமடைந்தார்.
அதன் பிறகு தெலுங்கு சினிமா என்.டி.ஆரை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. 1952-ல் ‘கல்யாணம் பண்ணிப்பார்’ என்னும் திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படத்தின் வெற்றிக்கும் பிறகு என்.டி.ஆர் அசைக்க முடியாத நடிகராக உருவானார்.

-விளம்பரம்-

ஆந்திர மக்கள் இவரை கடவுளாகவே கொண்டாடினர். இன்றளவும் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கு திரைப்படத்துறைக்கு பெருமை சேர்த்தமைக்காக 1968-ல் பத்மஸ்ரீ விருது என்.டி,ஆருக்கு வழங்கப்பட்டது.
தமிழில் மாயா பஜார், லவகுசா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். 1980களில், என்.டி.ராமா ராவ் அவர்கள் திரையுலக வாழ்க்கையில் இருந்து ஓய்வுப் பெற்று, தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். தற்போது சந்திர பாபு நாயுடு தலைவராக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியை 1982 ஆம் ஆண்டு நிறுவியவர் என்.டி.ஆர்தான்.

- Advertisement -

மூன்று முறை முதல்வராக இருந்த NTR :-

1983 – 1994 காலக்கட்டத்தில் என்.டி.ஆர் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். இவர் முதல்வராக இருந்த காலக்கட்டத்தின் சினிமா துறைக்கு ஆற்றிய பங்கு அதிகம். 1994 ஆம் ஆண்டு முதல்வரானார்.995 ஆம் ஆண்டு கட்சியில் நடந்த உள்பூசல் காரணமாக தெலுங்கு தேசம் கட்சி உடைந்தது. என்.டி.ஆரும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதையடுத்து சந்திரபாபு நாயுடு ஓட்டெடுப்பு நடத்தி முதலமைச்சரானார். 1என்டிஆர். மனைவியின் பிரிவிற்கு பிறகு தனது 12 மகன், மகள்கள் மற்றும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட பேரக்குழந்தைகளுடன் என்டிஆர் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.

NTR மறைவு :-

பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மாரடைப்பால் 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்தார்.அவர் மறைவு தெலுங்கானாவில் இருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. NTRன் ரசிகர்களின் மனதை உளுக்கியது.என்.டி.ராமாராவின் 4-வது மகள் உமா மகேஸ்வரி, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் பங்களாவில் இன்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உமா மகேஸ்வரி சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.என்டிஆர் என அழைக்கப்படும் என்.டி.ராமா ராவுக்கு மொத்தம் 12 குழந்தைகள்.

-விளம்பரம்-

NTR மகள் உமா மகேஸ்வரி தற்கொலை :-

அதில் இளைய மகள் உமா மகேஷ்வரி. மேலும் நான்கு சகோதரிகளில் அவர் இளையவர். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான டக்குபதி புரந்தேஸ்வரியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவின் மனைவியுமான நாரா புவனேஸ்வரி, உமா மகேஷ்வரியின் சகோதரிகள். உமா மகேஷ்வரியின் தற்கொலை குறித்து தகவல் அறிந்த சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ் உள்ளிட்டோர், அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.

போலீஸ் விசாரனை :-

உமா மகேஸ்வரியின் தற்கொலையை தொடர்ந்து, சிஆர்பிசி பிரிவு 174ன் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், உமாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? தற்கொலைக்கு முன்பு ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பதை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு உமா மகேஸ்வரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

Advertisement