சொத்து பிரச்சனையால் சிதைந்த சினிமா வாய்ப்பு, துணி வியாபாரம் – மறைந்த வடிவேலுவின் தம்பியின் அறியாத பக்கம்.

0
4909
Vadivelu
- Advertisement -

சிம்பு படத்தில் நடித்துள்ள வடிவேலுவின் தம்பியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு பிறகு காமெடியில் கொடிகட்டி பறந்தவர் வடிவேலு. ஆனால், ஹீரோவாக ஆசைப்பட்ட வடிவேலு ஷங்கருடன் ஏற்ப்பட்ட பிரச்சனை காரணமான சினிமாவில் பல ஆண்டுகள் நடிக்காமல் இருந்தார். பின்னர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்த வடிவேலு மாமன்னன் படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்து இருக்கிறார். சினிமாவில் தனது செக்கன்ட் இன்னிங்ஸ்ஸை துவங்கிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த வடிவேலுவிற்கு பேரிடியாக அமைந்தது அவரின் தம்பியின் இறப்பு.

-விளம்பரம்-

வடிவேலு மதுரையை சேர்ந்தவர். வடிவேலுவுடன் மொத்தம் பிறந்தவர்கள் 7 பேர். இதில் வடிவேலுவை தவிர வேறு யாரும் நல்ல நிலையில் இல்லை. இப்படி ஒரு நிலையில் வடிவேலுவின் உடன் பிறந்த தம்பி ஜெகதீஸ்வரன் நேற்று காலமாகி இருக்கிறார். அவரது சொந்த ஊரில் வைக்கப்பட்ட அவரின் உடலை காண சென்ற வடிவேலு அவரது உடலை பார்த்து உடைந்து போய் அழுதார். கடந்த ஜனவரி மாதம் தான் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா உடல்நலக்குறைவால் காலமாகி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜெகதீஸ்வரன் ‘நான் மலைக்கோவில் தீபம் காதல் அழிவதில்லை போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். அதன் பின்னர் எவ்வளவோ முயற்சி செய்தும் நடிக்க முடியாமல் போய்விட்டது. சொத்து தகராதையால் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டுவிட்டது. எனக்கு பணங்களில் நடிக்க ஆசைதான் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒத்துவரவில்லை என்று கூறியிருந்தார்.

வடிவேலுவிற்கு முதல் வாய்ப்பு கொடுத்தது ராஜ்கிரண் தான் இன்று இன்று வரை சொல்லப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான் வடிவேலு அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லலாம். இந்த படத்தில் தான் வடிவேலுவின் பெயர் டைட்டில் கார்ட்டில் வந்தது.

-விளம்பரம்-

எனவே, இந்த படம் தான் வடிவேலுவின் முறையான முதல் சினிமா அறிமுகம் என்றும் கருதப்படுகிறது.இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஆரம்பத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தை தான் முதலில் கொடுத்திருந்தார் ராஜ் கிரண். ஆனால், இவரது திறமை பிடித்துப்போக இவருடைய நடிப்பு திறனை பார்த்து இவரையே ஒரு பாடலையும் பாட வைத்து இருப்பார் ராஜ்கிரண். போடா போடா புண்ணாக்கு என்ற பாடல் மூலம் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும் பாடகராகவும் புகழ் பெற்றார் வடிவேலு.

இந்தப் படத்தில் தான் வடிவேலு அறிமுகம் என்று டைட்டில் போடப்பட்டிருந்தது. ஆனால், வடிவேலு அவர்கள் முதன் முதலாக 1988 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த என் தங்கை கல்யாணி என்ற படத்தில் நடித்து இருந்தார். இதற்குப் பிறகு தான் நடிகர் வடிவேலு அவர்கள் 1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்திருந்தார். எனவே, வடிவேலுவின் முதல் படம் என் தங்கை கல்யாணி தான் என்ற குழப்பமும் எழுந்துள்ளது.

Advertisement