ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் ஆங்கில ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் ஐயன் மேனுக்கு நம்ம விஜய் சேதுபதி தான் டப்பிங் பேசியுள்ளார்.
ஆனால், பலரும் ஐயன் மேனுக்கு, விஜய் சேதுபதி குரல் எடுபடவில்லை என்று புலம்பி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இனையதளம் ஒன்று நடத்திய வாக்கெடுப்பில். எங்களுக்கு பழைய ஐயன் மேன் குரல் வேண்டும் என்று இணையத்தளத்தில் பலரும் ஒரு வாக்களித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுவரை ஐயன் மேனுக்கு டப்பிங் கொடுத்தவர் யார் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய பெயர் ரவி ஷங்கர். இவர் ஐயன் மேனுக்கு மட்டும் இல்லை பாஸ்ட் அண்ட் புரியஸ் படத்தில் பால் வால்கருக்கும், மிசன் இம்பாஸிபல் படத்தில் டாம் க்ரூஸுக்கும் என்று பல்வேறு ஹீரோக்களுக்கு தமிழில் டப்பிங் கொடுத்துள்ளார்.