பெட்ரோல் விலை : அன்று தெறிக்க ட்வீட், இன்று தெறிக்க ஓட்டம் – நம்ம சிவகார்த்திகேயன் தான்.

0
1574
sk
- Advertisement -

இந்தியாவில் கடந்த மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் விலை உயர்ந்து வருவதை பலரும் கண்டித்து வருகின்றனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் லிட்டர் விலை 100 -ஐ தொட்டுள்ள பெட்ரோல் விலை தமிழ் நாட்டிலும் விரைவில் 10-ஐ தொட்டு விடும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். பெட்ரோல் விலையை கண்டித்து ஒரு சில சினிமா பிரபலங்கள் மட்டுமே சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கடந்த 2012 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் போட்ட ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட் ஒன்று தற்போது அதிகம் ஷேர் செய்ப்பட்டு வருகிறது. அந்த டீவீட்டில் , பெட்ரோல் விலை உயர்வை கேலி செய்யும் விதமாக வந்த ஜோக் ஒன்றை போட்டுள்ள்ளார்.

-விளம்பரம்-

பெட்ரோல் பங்க் பையன் : சார் எவ்ளோக்கு சார் பெட்ரோல்

- Advertisement -

திருவாளர் பொது ஜனம் : ஒரு 2 ரூபாய்க்கோ 4 ரூபாய்க்கோ வண்டி மேல தெளிச்சு விடு வண்டிய கொழுதிட்டு போயிறேன்

– சிவா

-விளம்பரம்-

இவ்வாறாக அந்த பதிவு இருக்கிறது. சமீபத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்றுவிட்டு சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்த போது,  முதல் முறையாக கோட்டைக்குள் வந்த தருணம் எப்படி இருந்தது என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்துக் கொண்டே முதல் முறையாக ஒரு குழந்தை தனக்கு பிடித்த இட த்திற்கு செல்லும் போது எப்படி இருக்குமோ அதே போன்று தான் நானும் இங்கு வந்தேன். இதுவரை செய்திகளில் மட்டுமே கோட்டையை பார்த்திருக்கிறேன் என்றார்.

இதையடுத்து மக்கள் பிரதிநிதியாக இந்த இடத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? அதற்கு சிரித்துக் கொண்டே இன்னமும் நன்றாக நடிக்க வேண்டும். சினிமா துறைக்கு வர வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். ஆனால், ஒரு கதாநாயகனாக வளர்ந்து, இன்று இந்த விருது வாங்கும் அளவிற்கு வந்துவிட்டேன் என்றார். விவசாயிகள் போராட்டம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்று அரசியல் தொடர்பான கேள்விகள் கேட்கும் போது சிரித்துக் கொண்டே அங்கிருந்து விடை பெற்றார் சிவகார்த்திகேயன்.

அன்று பெட்ரோல் விலை குறித்து படு தைரியமாக ட்வீட் போட்ட சிவகார்திகேயன் இன்று பெட்ரோல் விலை பற்றி கேட்டதும் தெறித்து ஓடி விட்டார். மேலும், பெட்ரோல் விலை பற்றி இதுவரை எந்த ஒரு பதிவையோ கருத்தையோ தெரிவிக்கவில்லை கலைமாமணி சிவகார்த்திகேயன்.

Advertisement