மிக்ஜாம் புயல் குறித்து கமலஹாசன் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையே மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு கொண்டு வருகிறது. இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டினுள்ளர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். மேலும், கன மழையால் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்து தேங்கி நிற்கிறது.

Advertisement

மிக்ஜாம் புயல்:

அதோடு புறநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களில் எல்லாம் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், மக்கள் வெளிவர முடியாத சுழலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னையினுடைய பல தெருக்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. இதனால் போக்குவரத்து வசதிகளும் ஸ்தம்பிக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மழையுடன் சேர்ந்து பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் முறிந்தும் கீழே விழுந்து இருக்கின்றது. இதனை அடுத்து தமிழக அரசு மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மீட்பு பணி:

அதோடு வரலாறு காணாத மழை என்பதால் விமான, ரயில், பேருந்து என அனைத்து போக்குவரத்து சேவைகளும் முடங்கி போயிருக்கிறது. இது குறித்து பிரபலங்கள் பலரும் பதிவு போட்டு வருகிறார்கள். முதல் கட்டமாக சூர்யா, கார்த்தி இணைந்து 10 லட்சம் நிதி உதவி செய்து இருக்கிறது. மேலும், தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, சென்னை மழைநீர் வடிகால் பணிகளுக்காக அரசு 4000 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தது. அதெல்லாம் என்ன ஆனது? என்றெல்லாம் அதிமுக, பாஜக கட்சிகளை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Advertisement

கமல் பதிவு:

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம். மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மக்கள் நீதி மய்ய உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறி இருந்தார்.

Advertisement

கமல் குறித்த விமர்சனம்:

இதை பார்த்து நெட்டிசன்கள், கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக கட்சி ஆட்சியில் இருந்தபோது நடிகர் கமலஹாசன் பதிவிட்ட டீவ்ட்டை சுட்டிக்காட்டி விமர்சித்து வருகிறார்கள். அதில், ஒரு மணி நேர மழை. தள்ளாடுகிறது தமிழகத்தின் தலை. வடகிழக்குப் பருவமழை வரட்டுமா என்று மிரட்டுகிறது. கருணை மழையைச் சேகரிக்க நீர் நிலைகள் தயார் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளத்தில் கற்ற பாடமென ஏதுமில்லை. வடிகால்கள் வாரப்படவில்லை.குழந்தைகள் மருத்துவமனையிலும் நீர் புகுவது குறையவில்லை. கரையோர மாவட்டங்கள் மேல் கடைக்கண்ணாவது வையுங்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement