வருங்காலத்துல டீ விப்போமா, இல்ல ரிக்‌ஷா இழுப்போமானு பயமா இருக்கு – பசுபதியின் Vintage வீடியோ.

0
3735
pasupathy

சினிமா உலகில் நுழைவதற்கு முன்பு நடிகர் பசுபதி பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரலாகி வருகிறது. நாடக கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி தற்போது சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் பசுபதி. ஆரம்பத்தில் இவர் கூத்துப்பட்டறையில் சேர்ந்து தன் திறமையை காண்பித்தார்.

பின் இவர் நடிப்பின் மீது வைத்து இருந்த ஆர்வத்தை பார்த்து பிரபலமான நடிகர்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தனர். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் தமிழ்மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் பசுபதி நடிப்பில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலும் இவருடைய வாத்தியார் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் அதிக அளவில் பேசப்பட்டது என்று சொல்லலாம். அதிலும் ரங்கன் வாத்தியார் மீம்ஸ் செம ட்ரெண்டிங் ஆனது.

தற்போது இவரை அனைவரும் வாத்தியார் என்று தான் அழைக்கிறார்கள். இந்நிலையில் பசுபதி அவர்கள் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்னால் பேசப்பட்ட வீடியோ தற்போது ட்விட்டரில் வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பது, 10– 15 வருஷமாக சினிமா துறையில் இருக்கிறவங்க எல்லாருமே கமர்சியல் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை வாங்குவதில்லை.

-விளம்பரம்-

அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்று கூட தெரியவில்லை. இதே போல் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தது. என்னைப் போல் பலரும் பயந்தார்கள். சினிமா துறையில் நுழையும் போது பிற்காலத்தில் எப்படி இருப்போம், ரிக்ஷா ஓட்டுவானா? டீ போடுவானா? என்று யாருக்குமே தெரியாது. ஆனால், எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது.

என்னால் சினிமா துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது என்றுபேசி இருக்கிறார். இதை பார்த்து பலரும் உங்களுடைய இந்த நம்பிக்கை தான் இன்று உங்களை சினிமா உலகில் நல்ல இடத்தில் நிறுத்தி இருக்கிறது என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement