பொண்ணு பின்னாடி இருந்து என்னா பிரயோஜனம் – வைரலாகும் தனுஷின் பழைய வீடியோ.

0
636
dhanush
- Advertisement -

ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என்று கேட்டதற்கு தனுஷ் விமர்சித்த கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நடிகை சமந்தா- நாக சைதன்யா இருவரும் விவகாரத்தை அறிவித்து இருந்தது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் விவாகரத்தை அறிவித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் பேரிடியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-
Dhanush Aishwarya Rajinikanth Wedding Photos And Their Separation  Confirmation | Dhanush Wedding Photos: शादी में Aishwaryaa से नहीं हट रही  थीं धनुष की नजरें, साउथ स्टार को दामाद बनाकर बेहद ...

தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு தனுஷ்அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார். அதிலும் சமீப காலமாகவே ஹாலிவுட், பாலிவுட்டிலும் கால்த்தடத்தை பதித்து இருக்கிறார்.

- Advertisement -

தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம்:

இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். தனுஷின் மனைவியான ஐஸ்வர்யாவும் இயக்குனர் ஆவார். மேலும், தனுஷுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் தாங்கள் பிரிவதாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் சமூக வலைதளபக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

விவாகரத்து செய்யும் தனுஷ்:

இதுகுறித்து தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கை, ’18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரமாக முடிவு செய்துள்ளோம். மேலும், இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார்.

-விளம்பரம்-

கொந்தளித்து போன ரஜினி ரசிகர்கள்:

தனுஷின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். இவர்களின் பிரிவிற்கு தனுஷ் இதுவரை சிக்கிய சர்ச்சைகள் தான் காரணம் என்று கூறி வருகின்றனர். மேலும், இதை பார்த்த ரஜினிகாந்த் ரசிகர்கள் கொந்தளித்து போய், தலைவர் அன்றே உங்களை வேண்டாம் என்றார். ஐஸ்வர்யா தான் கேட்கவில்லை. தலைவர் முடிவுதான் சரி. காதலித்த மனைவியை பிரிந்து விட்டீர்கள். எங்கள் தலைவரை கஷ்டப்படுத்தி நன்றாக இருக்க முடியாது என்று தெரிவித்து வருகிறார்கள். இப்படி சோசியல் மீடியாவில் ரஜினி ரசிகர்கள் பல்வேறு கருத்துகள் பதிவிட்டு வரும் நிலையில் தனுஷ் உடைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

வைரலாகும் தனுஷின் பழைய வீடியோ:

அதில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து இருந்த தனுஷ் ஜாலியாக சொன்ன விஷயம் அவருக்கு எதிராக தற்போது திரும்பி இருக்கிறது. அப்படி என்ன தனுஷ் சொன்னார் என்றால், நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பது காலங்காலமாக சொல்வதுதான். இது குறித்து உங்கள் கருத்து என்று கேட்டபோது, தனுஷ் சிரித்துக்கொண்டே கூறியது, என்ன அநியாயம் பார்த்தீங்களா! சார். நம்ம போய் கஷ்டப்பட்டு வேலை செய்து, காலக்கட்டி வைத்த கட்டி, டான்ஸ் ஆடி சம்பாதிக்கிறோம். பின்னாடி பெண் இருக்காங்க என்று சிம்பிளாக சொல்றாங்க. பின்னாடி இருந்து யாருக்கு பிரயோஜனம் என்று கூறியிருந்தார்.

ரஜினியின் நிலை குறித்து ரசிகர்கள் கருத்து:

இப்படி அவர் ஏதோ எதார்த்தமாக ஜாலியாக சொன்னதை இன்று விவாகரத்து அறிவிப்போடு சேர்த்து வைத்து ரசிகர்கள் பயங்கரமாக விமர்சித்துப் பேசி வருகிறார்கள். மேலும், இவர்களின் முடிவு தமிழ் சினிமா உலகில் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து பின் பல போராட்டங்களுக்கு பின்பு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யா விவாகரத்து அவருக்கு பேரிடியாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

Advertisement