நீண்ட நேரம் இந்தியில் கேட்ட கேள்விக்கு ஒரே வார்த்தையில் பல்ப் கொடுத்த தனுஷ் – வைரலாகும் வீடியோ.

0
1588
- Advertisement -

தமிழ் நடிகர்களில் ஒரு சில நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே பாலிவுட் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் ஹாலிவுட் வாய்ப்பு என்பது மிக அரிது பெரும்பாலும் பாலிவுட் நடிகர்கள் தான் ஹாலிவுட்டில் கால்தடம் பதித்து வந்தனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி, நொபொலீயன் என்று ஒரு சிலர் மட்டுமே கால்பதித்து இருந்தனர். ஆனால், இளைய தலைமுறை நடிகர் நடிகைகளில் யாரும் யாரும் ஹாலிவுட் படத்தில் நடித்தது இல்லை. அந்த குறையை தீர்த்து வைத்தவர் நடிகர் தனுஷ் தான். தமிழ் சினிமாவின் ஸ்லிம் சிவாஜி, தென்னெக ப்ருஸ்லீ, நடிப்பு அசுரன் என்று பல்வேறு பட்டப் பெயர்களால் அழைக்கப்படுவர் தனுஷ்.

-விளம்பரம்-

தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்த தனுஷ், ஆடுகளம் படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். அதே போல ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அதை தொடர்ந்து சமிதாப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்தார். இப்படி கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற தனுஷ், The Extraordinary Journey of the Fakir என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால்பதித்தார்.

இதையும் பாருங்க : டாப் லெஸ் உடையில் போஸ் கொடுத்துள்ள ‘சைக்கோ’ பட நடிகை அதிதி ராவ். வைரலாகும் ThrowBack புகைப்படம்.

- Advertisement -

இந்த படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது. தனுஷ் வட இந்தியா வரை பிரபலமானது 3 திரைப்படத்தின் மூலம் தான் இந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் இந்திய அளவில் பிரபலமடைந்தது. இதனால் தான் தனுஷின் பெயர் பாலிவுட் வரை பேசப்பட்டது. இப்படி ஒரு நிலையில் 3 பட சமயத்தில் தனுஷ் இந்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்து இருந்தார்.

அந்த பேட்டியில் பத்திரிகையாளர் தொடர்ந்து இந்தியில் கேள்வி கேட்டிருந்தார். அவர் கேட்ட கேள்வியை ஏதோ புரிந்த மாதிரி தளையாட்டிய தனுஷ் , தனக்கு இந்தி தெரியாது (முஜே இந்தி நஹி) என்று கூறி பல்ப் கொடுத்தார். பின்னர் அருகில் இருந்த சுருதி ஹாசன், எடுத்துக்கொடுக்க கொஞ்சம் பதில் அளித்தார் தனுஷ். இருந்தாலும் தனுஷால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

-விளம்பரம்-

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 3 பட சமயத்தில் இந்தி தெரியாத தனுஷ் தான் பின்னர் இந்தியில் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படத்தை கொடுத்தார் என்று அவரது ரசிகர்கள் தற்போது பெருமை பேசி வருகின்றனர். தனுஷ் இறுதியாக ‘ஜகமே தந்திரம்’ படத்தில் நடித்து இருந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

Advertisement